மற்ற மாநிலங்களில் சிமெண்ட் விலை அதிகம் இல்லாத வகையில் தமிழகத்தில் மட்டும் கட்டுமான பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் 420 ரூபாயாக இருந்த சிமெண்ட் விலை தற்போது 490 ரூபாயாக அதிகரித்தது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனர்.
இந்த விலை உயர்வை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக முதலமைச்சரிடம் ஆலோசித்து மேற்கொள்ளப்படும் என தொழில் மற்றும் தமிழ் பண்பாட்டுதுறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். மேலும் தென்மாவட்டங்களான மதுரை, தூத்துக்குடி, விருதுநகர்,சிவகங்கை இடங்களில் தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் போன்றவற்றை கொண்டு வர தொழில் துறை திட்டமிட்டுள்ளது. சென்னை, கோவைக்கு இணையாக மதுரை, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் தொழில் வழிச்சாலையை மேம்படுத்த தொழில்துறை திட்டமிட்டுள்ளது.
கடந்த இரண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் செய்யப்பட்ட ஒப்பந்தங்கள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.சென்னையில் அதிக முதலீட்டில் தொழில் துவங்க அளிக்கப்படும் சலுகைகள் தென்னக பகுதிகளில் குறைந்த முதலீட்டில் தொழில் துவங்கும் நிறுவனங்களுக்கும் சலுகைகள் வழங்கப்படவுள்ளது.
வியாழக்கிழமை முதல் பல சென்று நேரில் ஆய்வு செய்ய உள்ளதாக தொழில் மற்றும் தமிழ் பண்பாட்டுதுறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். ஜூலை 15 ம் தேதிக்கு பிறகு புதிய தொழில் முதலீட்டாளர்களை தமிழகத்தில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்புவிடுக்கப்படும் என்றும் கூறினார். மக்கள் பாதிக்கக்கூடாது என்பதற்காக உடனடியாக சிமெண்ட், கம்பி உற்பத்தியாளர்களுடன் ஆலோசனை நடத்தி மேலும் அதன் மூலம் சிமெண்ட் விலை மூட்டைக்கு 30 ரூபாய் குறைந்து 460 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக கூறினார்.
மேலும் படிக்க:
இனிமேல் முகக்கவசம் அணிய வேண்டாம்- இங்கில்லை, இத்தாலியில்!
இன்னும் 10 நாட்களில் மின்தடை இருக்காது! மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி!!