1. செய்திகள்

இன்னும் 10 நாட்களில் மின்தடை இருக்காது! மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி!!

Daisy Rose Mary
Daisy Rose Mary

விரைவில் மின்தடை பிரச்சனை தீர்க்கப்படும் என்றும், இன்னும் 10 நாட்களில் தமிழகத்தில் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

அதிமுக குற்றச்சாடு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றதையடுத்து, ஆளுநர் உரையுடன் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. தொடர்ந்து ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ரவி, கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் மின் தடை ஏற்பட்டு வருவதாகவும், திமுக ஆட்சி என்றாலே மின்தடை ஆட்சி என்ற நிலைதான் உள்ளது என்றும், மின் கட்டணம் வசூலிப்பதில் குளறுபடி உள்ளதாகவும் சரமாரியாக குற்றம் சாட்டினார்.

பராமரிப்பு பணிகளால் மின்தடை

இதற்கு பதில் அளித்து பேசிய மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மின் கட்டணம் வசூலிப்பதற்கு போதிய கால அவகாசம் கொடுக்கப்பட்டதாகவும், அதில் எவ்விதமாக குளறுபடியும் இல்லை என்றும் தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் தற்போது ஏற்பட்டு வரும் மின்தடைக்கு காரணம் கடந்த ஆட்சியில் மின்சாரத்துறையில் எவ்விதமான பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளபடாதது தான் என்றும், இதனை சரிசெய்யவே தற்போது தற்காலிகமாக மின் தடை ஏற்படுவதாகவும் தெரிவித்தார். விரைவில் மின்தடை பிரச்சனை தீர்க்கப்படும் என்றும், இன்னும் 10 நாட்களில் தமிழகத்தில் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என்றும் செந்தில் பாலாஜி சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

அதிமுகவுக்கு கேள்வி?

தொடர்ந்து பேசிய எதிர்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம், இதற்கு கடந்த ஒரு மாதமாக இந்த அரசு என்ன செய்தது என கேள்வி எழுப்பியதோடு, கடந்த 9 மாதங்களாக மின் தடை இல்லை என்றும், இந்த ஒரு மாதமாக தான் மின்தடை உள்ளதாகவும் புகார் தெரிவித்தார்.

ஓபிஎஸ் புகாருக்கு விளக்கம் அளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த ஆட்சியில் தமிழகம் மின்மிகை மாநிலமாக இருந்தது என்று சொல்கிறார்கள். ஆனால் 2,42,000 விவசாயிகளுக்கு மின் இணைப்பு கொடுக்காமல் காத்திருக்க வைத்தது ஏன் என்று வினவினார்.

முடிவுக்கு வந்த விவாதம்

தொடர்ந்து நடைபெற்ற காரசார விவாதத்தில் குறுக்கிட்டு பேசிய நீர்வளத்தறை அமைச்சர் துரைமுருகன், முன்னாள் அமைச்சர்களின் கேள்விக்கு பதில் அளிக்க நேரம் அளித்துக்கொண்டே இருந்தால் அவையை நடத்தமுடியாது என்று கூறி விவாதத்தை முடித்து வைத்தார்.

மேலும் படிக்க...

3-வது அலையை எதிர்கொள்ளத் தயார் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி!

18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசக் கொரோனாத் தடுப்பூசி - தமிழக அரசு!

கொரோனா தடுப்பூசி விநியோகிக்க டிரோன் பயன்பாடு! ஆய்வு செய்ய அரசு அனுமதி!

English Summary: There will be no Power cut in Tamilnadu In next 10 days, EB minister assures in assembly

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.