நடப்பு காரீஃப் பருவத்தில் மத்திய அரசின் நெல் கொள்முதல் (Paddy Procurement) 200 லட்சம் மெட்ரிக் டன்களை நெருங்கியுள்ளது.
காரீஃப் சந்தைக் காலத்தில் அக்டோபர் 30ம் தேதி வரை கடந்த ஆண்டை விடவும் 23 சதவீதம் கூடுதலாக நெல் கொள்முதல்செய்யப்பட்டிருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய அரசு மேலும் தெரிவித்துள்ளதாவது:
-
நடப்பு காரீஃப் சந்தைக் காலத்தில் (2020-21), பயிர்களை விவசாயிகளிடமிருந்து குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு அரசு தொடர்ந்து கொள்முதல் செய்து வருகிறது
-
பஞ்சாப், அரியானா, உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு, உத்தரகாண்ட், சண்டிகர், ஜம்மு காஷ்மீர், குஜராத் மற்றும் கேரளாவில் நெல் கொள்முதலில் நல்ல முன்னேற்றம்.
-
இங்கு கடந்த 30ம் தேதி வரை 197.19 லட்சம் மெட்ரிக்டன்னுக்கும் அதிகமாக நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டு இதே காலகட்டத்தில் 159.76 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டிருந்தது.
-
இது கடந்தாண்டு இதே ஆண்டு காலகட்டத்தில் மேற்கொள்ளப் பட்ட கொள்முதலை விடவும் 23.43 சதவீதம் அதிகம்.
-
இந்தாண்டில் இது வரையிலான 197.19 லட்சம் மெட்ரிக் டன் மொத்த கொள்முதலில், பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் 136.47 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப் பட்டுள்ளது. இது மொத்த கொள்முதலில் 69.21 சதவீதம் ஆகும்.
-
நடப்பு காரீப் சந்தை காலத்தில் 16.62 லட்சம் விவசாயிகள் ஏற்கனவே பயனடைந்துள்ளனர்
-
அதோடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து 1.23 லட்சம் மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
-
மேலும், மாநிலங்கள் வேண்டுகோள்படி, தமிழ்நாடு, கர்நாடகா மகாராஷ்டிரா, தெலங்கானா, குஜராத், ஹரியானா, உத்தரப் பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான், மற்றும் ஆந்திரப் பிரதேசத்தி லிருந்து 45.10 லட்சம் மெட்ரிக் டன் பருப்பு மற்றும் எண்ணெய் வித்துக்கள் ஆதரவு விலையில் கொள்முதல் செய்யவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
மழைக்காலங்களில் வயல்வெளியில் படைபெயடுக்கும் பாம்புகள்- எச்சரிக்கை அவசியம்!
PMKSY : ஒரு துளியில் அதிக மகசூல் திட்டத்திற்கு ரூ.400 கோடி - டெல்டா விவசாயிகளுக்கு அழைப்பு!