பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 15 June, 2023 10:40 AM IST
Centre order to monitor the prices of Tur and Urad

துவரம் மற்றும் உளுத்தம் பருப்பின் விலை அதிகரித்து வரும் நிலையில், வருகிற அக்டோபர் 31 ஆம் தேதி வரை மொத்த மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் பருப்பினை அதிகப்பட்சம் எவ்வளவு இருப்பு வைக்கலாம் என்பதனை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

மாநிலங்களில் துவரம் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பின் இருப்பு நிலையையும் மாநில அரசுகளால் இருப்பு வரம்புகள் அமலாக்கம் பற்றியும் ஆய்வு செய்வதற்கான கூட்டம் நேற்று (14.06.2023) நடைபெற்றது.

மாநில உணவு மற்றும் குடிமைப் பொருள்கள் வழங்கல் துறை, மத்திய கிடங்குக் கழகம், மாநில கிடங்குக் கழகங்கள் ஆகியவற்றின் அதிகாரிகள் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்திற்கு மத்திய நுகர்வோர் நலத்துறை கூடுதல் செயலாளர் திருமதி.நிதி கரே தலைமை தாங்கினார். துவரம் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பின் பதுக்கலைத் தடுக்கவும், இவை நுகர்வோருக்கு எளிதாகக் கிடைப்பதை உறுதி செய்யவும், அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் 1955-ன் கீழ் இவற்றுக்கான இருப்பு வரம்புகள் 2023 ஜூன் 2 அன்று நுகர்வோர் நலத்துறையால் நிர்ணயிக்கப்பட்டன.

இதன்படி, 2023 அக்டோபர் 31 வரை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மொத்த விற்பனையாளர்களுக்கான இருப்பு வரம்பு 200 மெட்ரிக் டன் என்றும், சில்லறை வியாபாரிகளுக்கான இருப்பு வரம்பு 5 மெட்ரிக் டன்னாகவும் நிர்ணயிக்கப்பட்டது. இவர்கள் தங்களின் இருப்பு நிலையை https://fcainfoweb.nic.in/psp என்ற இணையப் பக்கத்தில் அறிவிப்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், துவரம் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பின் விலையைத் தொடர்ந்து கண்காணிக்குமாறும் கையிருப்பு நிலைமைகளை சரிபார்த்து இருப்பு வரம்பு உத்தரவை மீறுவோருக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறும் மாநில அரசுகளை ஒன்றிய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. 

துவரம் பருப்பின் கையிருப்பை மாநில அரசுகளுடன் இணைந்து கண்காணிக்க கூடுதல் செயலாளர் திருமதி.நிதி கரே தலைமையிலான குழுவை நுகர்வோர் நலத்துறை கடந்த மார்ச் மாதம் நியமித்தது.

தமிழ்நாடு, கர்நாடகா, மத்தியப்பிரதேசம், மகாராஷ்ட்டிரா மாநிலங்களின் பல்வேறு பகுதிகளுக்குப் பயணம் செய்து துவரம் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பின் கையிருப்புப் பற்றிய கள நிலவரங்களை அறிவதற்கு 12 மூத்த அதிகாரிகளையும் நுகர்வோர் நலத்துறை நியமித்துள்ளது.

மாநில அரசுகள், இறக்குமதியாளர்கள், மில்லர்கள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட சில்லறை விற்பனைச் சங்கிலிகள் ஆகியவற்றுடன் இக்குழுவானது தொடர் கூட்டங்கள் நடத்தின. நுகர்வோருக்கு மலிவு விலையில் பருப்பு வகைகளை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை இக்குழு ஆராய்ந்து வருகிறது.

வெளிச்சந்தைகளில் கடந்த சில வாரங்களாக பருப்பின் விலை பன்மடங்கு அதிகரித்து விற்பனையாகிறது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் விலை உயர்வினை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும் காண்க:

செந்தில்பாலாஜி கைது எதிரொலி- அமைச்சரையில் மீண்டும் மாற்றமா?

English Summary: Centre order to monitor the prices of Tur and Urad
Published on: 15 June 2023, 10:40 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now