1. செய்திகள்

தினை ஐஸ்கிரீம்- காப்புரிமை மூலம் வருவாய் ஈட்டும் அரசு கல்லூரி!

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
Millet ice cream- Govt college trying to earn revenue through patents

தமிழ்நாடு கால்நடை மருத்துவ மற்றும் கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தின் (Tanuvas) கீழ் இயங்கும் உணவு மற்றும் பால் தொழில்நுட்ப துறையானது தினை ஐஸ்கிரீம் தயாரிக்கும் தொழில்நுட்ப முறையினை தனியார் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்வதில் தீவிரமாக உள்ளது. இந்தக் கல்லூரி சமீபத்தில் தினை ஐஸ்கிரீம் தயாரிப்பதற்கான காப்புரிமையைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

குறைந்தது மூன்று ஸ்டார்ட் அப் நிறுவனங்களாவது தற்போது எங்களுடன் இணைந்து பல்வேறு தினை ஐஸ்கிரீம்களை தயாரித்து தங்கள் சொந்த பிராண்ட் பெயரில் விற்பனை செய்கின்றனர். நாங்கள் தொழில்நுட்ப ஆதரவை வழங்குகிறோம் மற்றும் தொடக்க நிறுவனங்கள் பெயரளவு உறுப்பினர் கட்டணத்தை செலுத்திய பிறகு கல்லூரியின் தினை ஐஸ்கீரிம் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றன” என்று உணவு ஆராய்ச்சி காப்பக மையத்தின் பொறுப்பாளர் கே.எஸ்.பாண்டியன் கூறினார். ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு விற்பனை மற்றும் லாபம் அதிகரித்தால், கல்லூரியானது லாபத்தில் பங்கு கேட்கும் என்றும் அவர் கூறினார்.

தினை ஐஸ்கிரீம்கள் குறித்த தொழில்நுட்ப அறிவைப் பகிர்ந்து கொள்ள பிற மாநிலங்களைச் சேர்ந்த சில நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கல்லூரி அதிகாரிகள் தெரிவித்தனர். "தினை விவசாயிகள் தினை ஐஸ்கிரீம் தயாரிப்பதன் மூலம் தங்கள் உற்பத்திக்கு மதிப்பு சேர்க்க ஊக்குவிக்கப்படுகிறார்கள். தினை உற்பத்தி மற்றும் நுகர்வை ஊக்குவிக்கும் விதமாகவும், அதன் ஆரோக்கிய நன்மைகள் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தினை சார்ந்த பொருட்களுக்கான தேவை அதிகரித்துள்ளது,” என்று கல்லூரி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

பால் பொருட்களுக்கு மாற்றாக தினை பாலினை பயன்படுத்தி கொழுப்பு உள்ளடக்கத்தை குறைப்பதன் மூலம் ஐஸ்கிரீமின் பதிப்பை கல்லூரி உருவாக்கியது. தினையில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் மற்றும் ஐஸ்கிரீமை மிகவும் சுவையாகவும், கவர்ச்சியாகவும் மாற்ற, மாம்பழம், பலாப்பழம் மற்றும் பிற பழங்களின் கூழ் அதில் சேர்க்கப்பட்டது. கடந்த ஆண்டு ஐஸ்கிரீமுக்கான காப்புரிமையை கல்லூரி பெற்றிருந்தது.

"நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை முறையாக சந்தைப்படுத்தி நல்ல விற்பனையை பதிவு செய்ய நேர்ந்தால், தினை ஐஸ்கிரீமின் காப்புரிமை அடிப்படையில் கல்லூரிக்கு நிலையான வருவாய் கிடைப்பது உறுதியாகும்" என்று பாண்டியன் கூறினார்.

ஐக்கிய நாடுகள் சபை இந்த ஆண்டை ‘தினை ஆண்டுஎன்று அறிவித்துள்ளது. இதற்கு உலகின் 22 நாடுகள் ஆதரவளிக்கின்றன. IIMR (Indian Institute of Millets Research) நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள விவசாயிகள் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு தினை உற்பத்தி மற்றும் அதன் வியாபார உத்திகளை ஊக்குவித்து பயிற்சி அளிக்கிறது.

உலகின் இன்றைய மிகப் பெரிய சவாலாக மாற இருக்கும் ஊட்டச்சத்து குறைபாடுக்கு தினையில் தயாரிக்கப்படும் உணவு முறைகள் ஒரு சிறந்த தீர்வாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மேலும் காண்க:

ஏக்கருக்கு 45 கிலோ யூரியா- குறுவை நெல் சாகுபடி தொகுப்பு திட்ட விவரம்

English Summary: Millet ice cream- Govt college trying to earn revenue through patents Published on: 13 June 2023, 02:24 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.