வெயில் வாட்டி வதைக்கும் இந்நாளில் மழை என்றாலே அனைத்துத் தரப்பு மக்களும் விருப்பம் கொள்கிறார்கள். அந்த விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் தமிழகத்தின் 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை தகவல் மையம் தெரிவித்துள்ளது.
மழையை விரும்பாத மக்களே இல்லை எனும் அளவிற்கு இந்த கோடை வெயில் மக்களை வாட்டிக் கொண்டு இருக்கின்றது. இந்நிலையில், தமிழகத்தின் எந்த 13 மாவட்டங்களில் மழை அறிவிப்பு வந்துள்ளன என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரை கண்ணன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், தர்மபுரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் கூறியுள்ளார்.
iPhone 13 Pro Max: ஆப்பிள் ஐபோனுக்கு அதிரடி தள்ளுபடி! ரூ.2500-க்கு ஐபோன்!!
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், நாளை(ஜூன்13) ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும், ஜூன் 14ல் ஓரிரு இடங்களில் மற்றும் ஜூன் 15, 16ல் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தகவல் வெளிவந்துள்ளது.
பெண்களுக்கு ரூ. 6000 கிடைக்கும் மத்திய அரசின் திட்டம்: இன்றே அப்ளை பண்ணுங்க!
சென்னை என்று பார்க்கும் பொழுது அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38- 39 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28- 29 டிகிரி செல்சியஸ் எனும் அளவைப் பெற்று இருக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
TNUSRB SI Admit Card 2022 வெளியாகியது: நேரடி இணைப்பு உள்ளே!
மீனவர்களுக்கான செய்தியில் ஜூன்12,13ல் லட்சத்தீவு பகுதி, தென் கிழக்கு அரபிக்கடல், கேரள கடலோர பகுதிகள் மற்றும் வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனக் கூறப்படுகிறார்கள்.
மேலும் படிக்க
50% மானியத்தில் நெல் அறுவடை இயந்திரம் பெறுவது எப்படி? இன்றே விண்ணப்பியுங்கள்!
ஃபிக்சட் டெபாசிட் (FD) வட்டி விகிதம் உயர்வு! மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!