வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன மழையும் பிற மாவட்டங்ளில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவக்காற்று காரணமாகத் தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மழையை ஒட்டியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் நீலகிரி. கோவை, தேனி மாவட்டங்களில் தொடர் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரியில் கன மழைக்கு வாய்ப்பு
வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தற்கு திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கோயம்புத்தூர், தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
கேரளா- கர்நாடகா, கோவா கடலோர பகுதிகள், லட்சதீவு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40-50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
தென்மேற்கு, மத்திய மேற்கு வங்கக்கடல், மத்திய மேற்கு அரபிக்ககடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40-50 கிலோ மீட்டர் வேகத்தில் வீச வாய்ப்புள்ளதால் அந்த பகுதிகளில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது
அணைகளின் நீர்மட்டம் உயர்வு
இதனிடையே தொடர் மழை காரணமாகத் தமிழகத்தில் உள்ள அணைகளின் நீர் மட்டம் உயர்ந்து (Dam level increases) வருகிறது. குறிப்பாக மேட்டூர் அணை, முல்லைப்பெரியாறு அணை, பவானிசாகர் அணை, ராம நதி அணை, சோத்துப்பாறை அணை உள்ளிட்ட அணைகளின் நீர் மட்டம் அதிகரித்துள்ளது, இதனால் ஒரு சில அணைகளில் இருந்து அதிக அளவிலான தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒரு சில பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க....
இலக்கை மிஞ்சிய குறுவை சாகுபடி - குவியும் நெல் மூட்டைகள்!
வியாபாரச் சான்றிதழ் இல்லாத வணிகர்களும் PM SVANidhi திட்டத்தில் பயன்பெறலாம்!!
RBI : தங்க நகைகளுக்கு இனி அதிக கடன் (90% வரை) பெறலாம் - ரிசர்வ் வங்கி அறிவிப்பு