1. செய்திகள்

வியாபாரச் சான்றிதழ் இல்லாத வணிகர்களும் PM SVANidhi திட்டத்தில் பயன்பெறலாம்!!

Daisy Rose Mary
Daisy Rose Mary
street vendors can get benefit now

பிரதமரின் சுவநிதித் (PM SVANidhi) திட்டத்துக்கான பரிந்துரைக் கடிதம் முறையை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் அடையாள அட்டை மற்றும் வியாபார சான்றிதழ் இல்லாத, மற்றும் இந்தத் திட்டத்தின் மூலம் பலன்களைப் பெறுவதற்காக எடுக்கப்பட்ட பட்டியலிலும் இல்லாத வணிகர்களும் இந்த திட்டத்தில் பயன்பெற முடியும். 

முழுக்க டிஜிட்டல் (Digital) மயமான இந்த செயல்முறையின் மூலம் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பிடம் பரிந்துரைக் கடிதத்தை தகுதியுள்ள வணிகர் கோரலாம். அது கிடைத்தவுடன், பிரதமரின் சுவநிதியின் கீழ் கடனுக்காக வியாபாரிகள் விண்ணப்பிக்கலாம்.

தேவையான ஆவணங்கள்

பிரதமரின் சுவநிதி இணையதளத்தின் மூலம் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பிடம் பரிந்துரைக் கடிதத்துக்காக விண்ணப்பிக்கும் போது, பின்வருவனவற்றில் ஏதாவது ஒரு ஆவணம் (Documents Required) வணிகரிடம் இருக்க வேண்டும்

  • பொதுமுடக்கத்தின் போது ஒரு முறை பெறும் உதவிக்காக சில மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களால் வழங்கப்பட்ட சான்று

  • வணிகர் சங்கங்களில் உறுப்பினராக உள்ள தகவல்கள் அல்லது வணிகர் என்று நிரூபிப்பதற்கு ஏதேனும் இதர ஆவணங்கள்.

  • மேலும், வணிகர் என்று உறுதிப்படுத்துவதற்காக ஊள்ளூரில் விசாரணை நடத்துவதற்கு வேண்டி நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பிடம் ஒரு சாதாரண வெள்ளை தாளில் எழுதியும் விண்ணப்பிக்கலாம்.

பரிந்துரைக் கடிதம் தொடர்பான கோரிக்கைகளை நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள்15 நாட்களுக்குள் தீர்க்க வேண்டும். பரிந்துரைக் கடிதம் பெற்ற வியாபாரிகளுக்கு 30 நாட்களுக்குள் வணிக/அடையாள அட்டை வழங்கப்படும். இதன் மூலம் அதிக அளவிலான பயனாளிகளுக்கு இந்தத் திட்டம் சென்றடையும்.

பிரதமரின் சுவநிதி இணையதளத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் முறை தொடங்கிய 2 ஜூலை, 2020 அன்று முதல், 4.5 லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் வரப்பெற்று, பல்வேறு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் இருந்த வந்த 82,000-க்கும் அதிகமானவைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க... 

நீலகிரி, கோவை, தேனிக்கு ரெட் அலேர்ட்! 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

RBI : தங்க நகைகளுக்கு இனி அதிக கடன் (90% வரை) பெறலாம் - ரிசர்வ் வங்கி அறிவிப்பு

English Summary: Now vendors who don’t have Identity Card and Certificate of Vending can also get benefit under PM SVANidhi

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.