டவ்-தே புயல் கரையைக் கடந்துள்ளநிலையில் வெப்பச்சலனம் காரணமாக, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
டவ்-தே புயல் (Tauktae Cylone)
மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த அதி தீவிர புயல் டக்-தே நேற்று இரவு டையூவிற்கு 20 கிலோமீட்டர் வடகிழக்கு திரையில் சௌராஷ்டிராவில் கரையைக் கடந்தது. தற்போது அதேப் பகுதியில் வலுவிழந்து நிலைகொண்டுள்ளது.
18.05.21
மிதமான மழை (Moderate rain)
வெப்பச்சலனம் காரணமாக, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான வழை பெய்யக்கூடும்.
வறண்ட வானிலை (Dry Weather)
ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
19.05.21
மழைக்கு வாய்ப்பு (Chance of heavy rain)
-
திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
-
நீலகிரி கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுகிதளில் ஒருசில இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
-
ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
சென்னை (Chennai)
சென்னையைப் பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் ஒரு சில இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும்.
வெப்பநிலை (Temperature)
அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸையும் ஒட்டியே இருக்கும்.
மழைபதிவு (Rainfall)
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டத்தின் விராலிமலையில் 4சென்டி மீட்டர் மழைப் பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை (Warning to fishermen)
கடல் உயர் அலை முன்னறிவிப்பு (Sea high tide forecast)
19.05.21
தென் தமிழகக் கடலோரப் பகுதியில் (குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை) நாளை இரவு 11.30 மணி வரை கடல் அலை 1.5 முதல் 2.5 கிலோ மீட்டர் உயரம் வரை எழும்பக்கூடும்.
எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மிகுந்த எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
கடலூரில் விதை பரிசோதனை திட்ட பணிகள் ஆய்வு! அதிக மகசூலுக்கு விதை உற்பத்தி தொழில்நுட்பங்கள்!
சீசன் இல்லாத காலத்தில் மல்லிகைப்பூ பூக்க ஆலோசனை வழங்குகிறது வேளாண் துறை! குறைந்த செலவில் அதிக இலாபம்!
மதுரையில் தரிசாகும் விவசாய நிலங்கள்! பயிருக்கு விலையும் இல்லை! களையெடுக்க ஆளிமில்லை!