அடுத்த 24 மணி நேரத்திற்கு, மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களிலும், தென் தமிழகத்திலும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
காற்றின் சுழற்சி (Circulation of air)
வடக்கு கேரளா முதல் வடக்கு மகாராஷ்டிரா வரை 1.5 கிலோ மீட்டர் உயரத்தில் காற்றின் சுழற்சி நிலவுகிறது.
மழைக்கு வாய்ப்பு (Chance of rain)
இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும்.
இதேபோல் தென் தமிழகத்தில் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இலேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
வானிலை முன்னறிவிப்பு (Weather Forecast)
13.03.21 மற்றும் 14.03.21
மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
15.03.2021 முதல் 16.03.21 வரை
தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
சென்னை (Chennai)
சென்னையைப் பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு முற்பகலில் வாகனம் ஓரளவு மேகமூட்டத்துடனும், அதன்பிறகு தெளிவாகவும் காணப்படும்.
வெப்பநிலை (Temperature)
அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸையும் ஒட்டியே இருக்கும்.
மழைபதிவு (Railfall)
கடந்த 24 மணி நேரத்தைப் பொருத்தவரை நீலகிரி மாவட்டம் குன்னூரிலும், கெட்டியிலும் தலா 5 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை (Warning to fishermen)
மீனவர்களுக்கு எவ்வித எச்சரிக்கையும் இல்லை.
மேலும் படிக்க...
மானியம் பெற்று தருவதாக விவசாயிகளிடம் மோசடி!