1. வாழ்வும் நலமும்

கோடையில் நீர்ச்சத்து இழப்பை ஈடு செய்ய பதநீர் குடியுங்கள்!

KJ Staff
KJ Staff
Summer Drinks
Credit : Tamil Webdunia

தமிழகத்தின் மாநில மரமான கற்பக விருட்சம் என்று போற்றப்படும் ஒரே மரம் இந்த பனை மரம் (Palm Tree) தான். நமது நாட்டில் அழிந்துகொண்டிருக்கும் மர வகைகளில் இந்த பனைமரம் முதலிடத்தில் உள்ளது. இந்த பனைமரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய நுங்கு, பதநீர், கிழங்கு மற்றும் பழம் போன்றவை அதிக சுவையுடன் மனிதர்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும், நோய் தீர்க்கும் மருந்தாகவும் செயல்படக்கூடியது. பனை மரத்திலிருந்து கிடைக்கும் நுங்கு அதனை வெட்டாமல் மரத்திலேயே விட்டுவிட்டால் அந்த நுங்கு நன்றாக பழுத்து பனம்பழமாகி (Palm fruit) விடும். இந்த பனம் பழத்தினை எடுத்து வெட்டி நிலத்தில் குழி தோண்டி அதில் புதைத்து வளர்த்து வந்தால் கிடைப்பதுதான் பனங்கிழங்கு. பனை மரத்திலிருந்து கிடைக்கும் பதநீர் கோடை காலத்தில் வெயிலின் தாக்கத்தை சமாளிக்கும் மிகச் சிறந்த பானம் ஆகும்.

பதநீரின் பயன்கள்:

  • பதநீர் நம் சீதோஷ்ண நிலைக்கு மிகச்சிறந்த பானம். உடல் சூட்டை உடனே தணித்து குளிர்ச்சியை அளிக்கக் கூடியது.
  • ரத்த சோகையை போக்கும்.
  • பதநீரில் லாக்டோர்ஸ் எனும் சர்க்கரை சத்து மிகவும் அதிகமாக உள்ளது. இது தவிர கொழுப்பு, கால்சியம், புரோட்டீன் சத்துக்களும் உள்ளன.
  • வைட்டமின் பி (Vitamin B) சத்து கொண்டுள்ள பதநீர் பித்தத்தை நீக்கி இருதயத்தை வலுவுள்ளதாக ஆக்கும்.
  • பதநீரில் உள்ள கால்சியம் (Calcium) சத்து பற்களை பலப்படுத்தும். கோடையில் கிடைக்கும் மாம்பழம் சாப்பிடுவதால் உடல் சூடு ஆகும். ஆனால் இனிப்பு மாம்பழங்களை துண்டு துண்டுகளாக நறுக்கி பதநீரில் போட்டு சாப்பிட்டால் ருசியாக இருக்கும். உடல் சூடும் நீங்கும்.
  • பதநீரானது இயற்கை நமக்கு தந்த இயற்கையான சத்தான பானம். கோடையில் (Summer) கலப்படமில்லாத பதநீர்,இளநீர் போன்றவை உடலில் ஏற்படும் நீர்ச்சத்து இழப்பை ஈடு செய்யும் அருமருந்தாகும்.

இயற்கையின் வரப்பிரசாதங்களில் ஒன்றான பதநீரை நாம் குடிப்பதால், நம் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல், பனைமரத்தையே நம்பி வாழும் விவசாயிகளும் பயன் பெறுவார்கள்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பனங்கிழங்கு சாப்பிடுங்கள்!

பழுக்காத மாங்காய் ஜூஸ் குடிப்பதால், நமக்கு கிடைக்கும் பல்வேறு நன்மைகள்!

English Summary: Sweet toddy to compensate for dehydration in summer! Published on: 10 March 2021, 05:19 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.