கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் எதிரொலியால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. எனினும், பெரும் மாற்றம் ஏற்படாத ஒரு சில விஷயங்களில் தங்க முதலீடு முதன்மையானதாகும். அதிரடி திருப்பமாக தங்கத்தின் விலையில் உயர்வும் காணப்பட்டது, இந்நிலையில், இன்று தங்கத்தின் விலை நிலவரம் என்ன? என்பதைப் பார்க்கலாம்.
ஒரு நாள் போல் ஒரு நாள் இருப்பதில்லை என்ற ஒரு பழைய சொலவடையுள்ளது. அந்த வகையில், தங்க விலை ஒரு நாள் குறைந்தால், அடுத்து வரும் நாட்களில் மிகப் பெரிய அளவில் உயர்ந்துவிடுகிறது. இதனால் நகை வாங்கும் மக்கள் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர். இன்று மீண்டும் தங்க விலை உயர்ந்சுள்ளது, குறிப்பிடதக்கது. சென்னையில் இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன என்று இந்த பதிவில் காணலாம்.
சென்னையில் தங்கம் விலை (Gold prices in Chennai):
சென்னையில் இன்று (ஏப்ரல் 21, 2022) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 6 ரூபாய் உயர்ந்து, ரூ. 4,969க்கு விற்கப்படுகிறது. நேற்று இதன் விலை 4,963 ரூபாயாக இருந்தது, குறிப்பிடதக்கது. அதேநேரம், நேற்று 39,704 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கம், இன்று, 48 ரூபாய் உயர்ந்து 39,752 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
நேற்று 5,414 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் (24 கேரட்) தங்கம், இன்று 5,420 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதே நேரம், நேற்று 43,312 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் (24 கேரட்) தங்கம் 48 ரூபாய் உயர்ந்து 43,360 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
சென்னையில், வெள்ளி விலை (In Chennai, Silver price):
வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை நேற்று ரூ.73.03 ஆக உள்ளது. மேலும், ஒரு கிலோ வெள்ளி 73,300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இன்றும், இதே நிலை தொடர்கிறது.
தங்கம், மக்களின் இயல்பு வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிப்பதாகும். விவசாயிகளும் தங்கம் வைத்து கடன் பெறுவதை எளிதென நம்புகின்றனர். விவசாயிகள் மட்டுமின்றி சிறு தொழில் முதல் பெருந் தொழில் செய்வோர் வரை அனைவரும் தங்கத்தில் செய்யும் முதலீடு மற்றும் தங்கத்தின் மீது வாங்கும் கடன் அனைத்தையும் எளிது என நம்புகின்றனர். ஆகவே இதன் விற்பனை இன்றளவும் இன்றியமையாதது, என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
வீட்டிலிருந்த படி, தங்கம் விலை அறிய; (Find out the price of gold at home)
வீட்டிலிருந்தபடியே, தங்கத்தின் விலைகளை நீங்கள் எளிதாகக் கண்டறியலாம். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது, 8955664433 என்ற எண்ணில் மிஸ்டு கால் கொடுத்தால் போதும், உங்கள் தொலைபேசியில் ஒரு செய்தி வரும், அதில் சமீபத்திய கட்டணங்களை நீங்கள் பார்த்து பயனடையலாம்.
மேலும் படிக்க:
முககவசம் அணிவது அவசியம்: அமைச்சர் மா. சுப்பிரமணியன் எச்சரிக்கை
சேமிக்கும் விளைபொருட்களை பூச்சிகள் இல்லாமல் எவ்வாறு பாதுகாப்பது?