1. விவசாய தகவல்கள்

விவசாயிகளுக்கு உதவும் மத்திய-மாநில அரசுகளின் நல திட்டங்கள்!

Daisy Rose Mary
Daisy Rose Mary
Image credit: The week

விவசாயத்தை ஊக்குவிக்கும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தினை முறையாக விவசாயிகள் பயன்படுத்திக் கொண்டால் விவசாயம் சார்ந்த பல பொருளாதார சிக்கல்களில் இருந்து விவசாயிகள் தங்களை பாதுகாத்துக்கொள்ள முடியும், அந்த வகையில் விவசாயிகளுக்கு பயனுள்ள சில முக்கிய திட்டங்கள் குறித்து நாம் பார்போம்.

பிரதமர் கிசான் சம்மான் நிதி திட்டம் (PM Kisan Samman Nidhi Yojana)

விவசாயிகளுக்கு அறிவித்துள்ள முக்கியமான திட்டங்களின் முதன்மையானதாக இந்த திட்டம் இருக்கிறது. விவசாயிகளின் வாழ்வாதரத்தை உயர்த்தும் நோக்கில் கடந்த 2019 ஆண்டு அறிமுகப்படுத்தப்பட இந்த திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 6,000 வழங்கப்படுகிறது. 

நான்கு மாதங்களுக்கு ஒரு முறை இத்திட்டத்தில் ரூ.2000/- வீதம் மூன்று தவணைகளில் விவசாயிகள் வங்கி கணக்கிற்கு செலுத்தப்படும். இத்திட்டம் சிறு, குறு, நடுத்தரம் மற்றும் பெரிய விவசாயிகளுக்கும் இப்போது வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தில் இனைய விலக்கு அளிக்கப்பட்ட நபர்களான அரசு பென்ஷன் பெறுவோர், நிறுவனத்தின் பெயரில் நிலம் உள்ளவர்கள், அரசியல்வாதி ஆகியவர்கள் தவிர மற்ற அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.

இணைவது எவ்வாறு?

 • PM Kisan Samman Nidhi யின் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியான https://pmkisan.gov.in/ -க்கு செல்லவும்.

 • கிசான் கடன் அட்டைக்கான படிவத்தைப் பதிவிறக்கம் செய்யவும்.

 • உங்கள் நிலத்தின் ஆவணங்கள் மற்றும் பயிர் குறித்த விவரங்களுடன் படிவத்தை நிரப்பவும்.

 • பின் உங்கள் அருகில் உள்ள வங்கிக்குச் சென்று அதனை ஒப்படைக்கவும் 

பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டம் (Pradhan Mantri Fasal Bima Yojana)

இது ஒரு பயிர் காப்பீட்டு திட்டம், எதிர்பாராமல் ஏற்படும் பயிர் சேதங்களுக்கு இழப்பீடு வழங்கி பாதுகாக்கவும், விவசாயிகளின் பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பருவத்திற்கு ஏற்ப (காரிஃப், ராபி) பயிர் காப்பீடு செய்துக்கொள்ள முடியும்.

இணைவது எப்படி?

இ-சேவை மையங்களில் நிலத்தின் சிட்டா, அடங்கல், வங்கி கணக்கு எண்ணுடன் பதிவு செய்து பயன் பெறலாம்.

ஆன்லைனில் PMFBY-க்கு விண்ணப்பிப்பது எப்படி?

 • PMFBY இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் செல்லவும் - https://pmfby.gov.in/

 • முகப்பு பக்கத்தில் உள்ள Farmers corner -யை கிளிக் செய்யவும்

 • இப்போது உங்கள் மொபைல் எண்ணுடன் உள்நுழைக,

 • உங்களிடம் கணக்கு இல்லையென்றால் Guest Farmer என்று கிளிக் செய்து உள்நுழைக

  பெயர், முகவரி, வயது, நிலை போன்ற தேவையான அனைத்து விவரங்களையும் பதிவிட வேண்டும்

 • இறுதியாக Submit பொத்தானைக் கிளிக் செய்க. 


பிரதாமர் மன் தன் யோஜனா திட்டம் (Pradhan Mantri Kisan Maandhan Yojana)

பிரதமரின் கிஸான் மன் தன் என்ற திட்டம் ஒரு விவசாயிகளுக்கான பென்ஷன் திட்டமாகும். 18 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். 18 வயதிற்கு ரூ.55 செலுத்த வேண்டும். பிரிமியம் தொகையை மாதந்தோறும், காலாண்டு, அரையாண்டு என வசதிக்கு ஏற்ப செலுத்தலாம். இதில் 60 வயதிற்கு பின்னர் மாதம் ரூ.3,000/- ஓய்வூதியம் பெறலாம்.

இந்த திட்டத்தில் இணைய தேவையான ஆவணங்களுடன் அருகில் உள்ள பொது சேவை மையத்துக்கு சென்று ஆன்லைன் மூலமாக பதிவு செய்யலாம். 


பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா திட்டம் (pradhan mantri suraksha bima yojana)

இது விபத்துக்காப்பீடு திட்டமாகும். விபத்து காரணமாக ஏற்படும் இறப்பு அல்லது உடல் ஊனத்திற்கு எதிராக வழங்கப்படும் ஒரு காப்பீடு திட்டம் ஆகும். இந்தத் திட்டம் 18 முதல் 70 வயது வரை உள்ள தனிநபர்களுக்கு வழங்கப்படுகின்றது. இந்த காப்பீடு திட்டத்தின் கீழ் தனி நபர் இறப்பிற்கு ரூ.2 லட்சமும், உடல் ஊனத்திற்கு ரூ.1 லட்சமும் இழப்பீடாக வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தில் சேர நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியை அனுகி தேவையான படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். அனைத்து முக்கிய வங்கிகளும் இந்த திட்டத்தின் பங்கேற்பாளர்களாக இருக்கின்றன.

கால்நடை காப்பீடு

விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் கால்நடைகளுக்கு நோய்யுற்றாலோ அல்லது இயற்கை சீற்றத்தினால் இறந்துவிட்டாலோ அதனை ஈடு செய்யும் விதமாக இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. தேசிய கால்நடை இயக்கத்தின் கீழ் கால்நடைகள் மானியத்துடன் கூடிய காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், வறுமை கோட்டிற்கு மேல் உள்ள கால்நடை வளர்போர்க்கு 50% மானியமும் வழங்கப்படுகிறது.

மேலும் படிக்க... 

வேளாண் துறையில் அதிக லாபம் பெற உதவும் சிறு தொழில்கள்!

மழைக்காலத்தில் செம்மறி ஆடுகளைத் தாக்கும் நோய்கள்- பாதுகாக்கும் வழிகள்!!

காய்கறிகள் மற்றும் பழங்களை விடுகளில் சுத்தம் செய்வது எப்படி?


English Summary: Here the list of Central and State welfare schemes to help farmers Published on: 04 July 2020, 05:28 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.