வங்கிகளின் இணைப்பு காரணமாக, ஆந்திரா வங்கி உட்பட 8 வங்கிகளின் காசோலைகள் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் செல்லாது. எனவே வாடிக்கையாளர்கள் தங்கள் காசோலைக்கான மாற்று ஏற்பாடுகளை செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மத்திய அரசு முடிவு (Union Government decision)
பொதுத்துறை வங்கிகள் சந்தித்து வரும் நெருக்கடியை சமாளிப்பதற்காக, வங்கிகள் இணைப்பு நடவடிக்கையை, மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்தது.
இந்த முடிவுக்கு வங்கி ஊழியர்களே கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இணைப்பு நடவடிக்கைகள் படிப்படியாக நடைமுறைபடுத்தப்பட்டன.
வங்கிகள் இணைப்பு (Banks Merge)
இதன்படி தேனா வங்கி, விஜயா வங்கி ஆகியவை, பேங்க் ஆப் பரோடாவுடனும்(Bank of Baroda), கார்ப்பரேஷன் வங்கி, ஆந்திரா வங்கி ஆகியவை, யூனியன் பேங்க் ஆப் இந்தியாவுடனும் (Union Bank of India)இணைக்கப்பட்டன.ஓரியன்டல் பேங்க் ஆப் காமர்ஸ், யுனைடெட் வங்கி ஆகியவை, பஞ்சாப் நேஷனல் வங்கியுடனும், சிண்டிகேட் வங்கி, கனரா வங்கியுடனும், அலகாபாத் வங்கி, இந்தியன் வங்கியுடனும் இணைக்கப்பட்டன.
அறிவுறுத்தல் (Instruction)
ஆனாலும், இணைப்புக்கு உள்ளான பழைய வங்கிகளின் காசோலைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு வந்தன. அவை, நாளடைவில் படிப்படியாக விலக்கிக் கொள்ளப்பட்டு, புதிய வங்கியின் காசோலைகள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும் என, ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
காசோலைகள் செல்லாது (Checks are invalid)
இந்நிலையில், வரும், 1ம் தேதி முதல், தேனா வங்கி, விஜயா வங்கி, கார்ப் பரேஷன் வங்கி, ஆந்திரா வங்கி, ஓரியன்டல் பேங்க் ஆப் காமர்ஸ், யுனைடெட் வங்கி, சிண்டிகேட் வங்கி, அலகாபாத் வங்கி ஆகிய, எட்டு வங்கிகளின் காசோலைகள் செல்லாது என, மத்திய அரசு அறிவித்து உள்ளது.
வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு (Customers alert)
எனவே, மேற்குறிப்பிட்ட வங்கிகளின் காசோலையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், புதிய வங்கியின் காசோலை புத்தகங்களை கேட்டுப் பெறும்படி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மேற்குறிப்பிட்ட வங்கிகளின் காசோலைகளை, இனி யாரும் பெறக்கூடாது. ஏற்கனவே பெற்றிருந்தால், அதை மாற்றி பெறும்படியும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மேலும் படிக்க...
கடன்களிலிருந்து எப்படி வரியை சேமிக்கலாம்! சில உதவிக்குறிப்புகள்.!
மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது எப்படி? இலவச வெபினாரை வழங்குகிறது தினமலர்!
வீட்டுக் கடன் வாங்கியிருக்கீங்களா? 6 மாதம் EMI தள்ளுபடி- LIC அதிரடி அறிவிப்பு!