News

Thursday, 16 June 2022 03:57 PM , by: Poonguzhali R

விவசாயத்தினை ஊக்குவிக்கும் பொருட்டுச் செயல்பட்டு வரும் மீடியா குழுமமான கிருஷி ஜாக்ரன் குழுமத்தின் நிறுவனர் திரு. டாம்னிக் மற்றும் மானுவெல் மலபார் ஜிவல்லரி மற்றும் ஹோட்டல் மலபார்-இன் நிறுவனர் திரு. மானுவெல் ஆகியோர் இருவரின் தந்தையான தெய்வத்திரு. எம்.வி. செரியன் அவர்கள் இன்று காலை 10 மணியளவில் இயற்கை எய்தினார். தந்தையாரின் சடலத்தைப் பிற தொழில் அதிபர்கள் மற்றும் மக்கள் பார்வையிட 10 மணிமுதல் மாலை 3 மணிவரை பார்வைக்கு வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாலை 3 மணியளவில் இறுதிச் சடங்கின் முதல் பகுதியான இறுதி ஊர்வலம் அவரது இல்லத்திலிருந்து புறப்பட்டுப் புதுதில்லி, ஹவுஸ்காஷில் உள்ள குட் ஷெபர்டு சர்ச் வரை செல்லப்பட்டது. அங்கு மாலை 4 மணியளவில் பூசைகள் நடத்தப்பட இருக்கின்றன. மாலை 5 மணியளவில் புது தில்லி, ஜஹான்பனா சிட்டி ஃபாரஸ்டில் இறுதிச் சடங்கு நடைபெற இருக்கிறது. தந்தையாரின் இறப்புக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவண்,
டாம்னிக் & மானுவல் (மகன்கள்)
மெர்சி & ஜிஜ் (மகள்கள்)
சைனி டாம்னிக் & டெலோனி மானுவல் (மருமகள்கள்)
எம். அலி & சஜி சாக்கோ (பேரன்கள்)
கிருஷி ஜாக்ரன்-KJ குடும்பம் மற்றும்
மலபார் குடும்பம்.

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)