எதிர்ப்பாராத மழையின் காரணமாக சில இடங்களில் நெல்லுக்கு சேதம் ஏற்படுகிறது என்ற தகவல் கிடைத்தவுடன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேளாண் மற்றும் உணவுத்துறை அமைச்சர்களை அழைத்து மாவட்ட ஆட்சி தலைவர்களுடன் பேசி இதற்கு தீர்வுகாண வலிறுத்தப்பட்டுள்ளதாக திமுக விவசாய அணி செயலாளர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து திமுகவின் சிறப்பு பிரதிநிதியும் மாநில திமுக விவசாய அணி செயலாளர் ஏ.கே.எஸ் விஜயன் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில் டெல்டா பகுதிகளில் விவசாய உற்பத்தி பொருட்கள் வீணாக கூடாது என்பதற்காக இல்லாமல் கமிஷனுக்காகவே பல கோடிகள் மதிப்பில் பல சேமிப்பு கிடங்குகளை கட்ட முடியாத நிலையில் வைத்தோடும் பெயரளவில் தூர்வாரும் பணி என்று அறிவித்து தூர்வாரப்படாமல் ஆண்ட அதிமுக போன்றவர்கள் அல்ல நாங்கள் என்பதை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியும் அதிமுக விவசாய பிரிவு செயலாளர் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டும்.
எதிர்பாராத மழை காரணமாக சில இடங்களில் நெல்லுக்கு சேதம் ஏற்படுகிறது என்று தகவல் தொலைக்காட்சியில் தெரிந்தவுடன் தமிழக முதலமைச்சர் வேளாண் அமைச்சரையும்,உணவுத்துறை அமைச்சரையும் தலைமை செயலாளரையும் அழைத்து மாவட்ட ஆட்சி தலைவர்களுடன் வீடியோ கானபெரென்ஸ் கூட்டத்தை நடத்தினார்.
அதன்படி, அதிமாக நெல் விளையும் 19 மாவட்டங்களின் ஆட்சி தலைவர்களுடன் விரைவாக கூட்டம் நடத்தப்பட்டது.அதில் நெல் மழையில் நனைந்து போவது உள்ளிட்ட விவசாயின் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காணவும் நெல் கொள்முதல்,பாதுகாப்பு மற்றும் சேமிப்புக்கு மாவட்ட ஆட்சி தலைவர்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டது.
மேலும் படிக்க:
நுண்ணீர்ப் பாசன உபகரணங்களுக்கு ரூ.40,000 வரை மானியம்!
ஆடுகளைத் துவம்சம் செய்யும் ஆட்டுக்கொள்ளை நோய்!
12 வயதிற்கு மேற்பட்டோருக்கும் வந்துவிட்டது கொரோனாத் தடுப்பூசி- ஓரிரு நாட்களில் அனுமதி!