1. விவசாய தகவல்கள்

நுண்ணீர்ப் பாசன உபகரணங்களுக்கு ரூ.40,000 வரை மானியம்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Subsidy up to Rs. 40,000 for micro irrigation equipment!

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் வட்டாரத்தில் நுண்ணீர்ப் பாசனத் திட்டத்தில் விவசாயிகள் தோட்டக்கலைத்துறையில் விண்ணப்பங்கள் வழங்கலாம் என தோட்டக்கலைத்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து, வெண்ணந்தூர் வட்டாரத் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் தமிழ்ச்செல்வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிட்டிருப்பதாவது:

இலக்கு (The goal)

நடப்பு ஆண்டில் தோட்டக்கலைப் பயிர்செய்யும் விவசாயிகளுக்கு 519 ஹெக்டர் பரப்பளவிற்கு நுண்ணீர்ப் பாசன உபகரணங்கள் வழங்கிட ரூ.4.30 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக விண்ணப்பங்கள் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

100% மானியம் (100% subsidy)

இதன்படி சிறு, குறு விவசாயிகளுக்கு 5 ஏக்கர் வரை நுண்ணீர்ப்பாசனம் அமைத்திட 100 சதவீத மானியத்திலும், பெரு விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தின் மூலம் அமைத்துக்கொள்ளலாம்.

முன்னுரிமை (Priority)

ஆதிபழங்குடி, பெண் விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

தேவைப்படும் ஆவணங்கள் (Documents required)

  • பாஸ்போர்ட் அளவு புகைப்படம்

  • சிட்டா

  • அடங்கல்

  • நிலவரைபடம்

  • குடும்ப அட்டை

  • ஆதார்

  • வங்கிக்கணக்கு புத்தகம்

  • சிறு, குறு விவசாயி சான்றிதழ் நகல்

முன்பதிவு கட்டாயம் (Booking is mandatory)

மேலேக் குறிப்பிட்டுள்ள ஆவணங்களை வெண்ணந்தூர் வட்டாரத் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் வாங்கு விவசாயிகள் தங்கள் பெயரை முன்பதிவு செய்துப் பயன் பெறலாம்.

மானியத் தொகை விபரம் (Subsidy Details)

மேலும் நடப்பு ஆண்டில் புதிதாக இத்திட்டத்தில் நுண்ணீர்ப் பாசனம் அமைக்கும் விவசாயிகளுக்கு குழாய் லைன் பதிக்க குழி எடுக்க ஆகும் செலவுத்தொகை ஹெக்டருக்கு ரூ.3 ஆயிரம் வழங்கப்படும்.

ரூ.40,000 வரை (Up to Rs.40,000)

மேலும் இதன் துணைத் திட்டமாக பிரதான குழாய் லைன் அமைக்க அதிகபட்ச மானியமாக ரூ.10 ஆயிரம், புதிதாக பயன்பாட்டிற்குக் கொண்டு வரும் கிணறு அல்லது போல்வெல்லில் மின்மோட்டார் பொருத்திக்கொள்ள ரூ15,000மும், பானத்திற்காக நீர்த்தேக்கத் தொட்டி 116 கனமீட்டர் அளவில் அமைக்க மானியமாக ரூ.40,000 வழங்கப்படும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

Online Ration Card: இப்போது நீங்கள் வீட்டில் இருந்தே ரேஷன் கார்டைப் பெறலாம், இங்கே எளிதான வழியை அறிந்து கொள்ளுங்கள்

விண்ணப்பித்த 15 நாளில் புதிய ரே‌ஷன் கார்டு - ஆளுநர் உரையில் தகவல்!!

 

English Summary: Subsidy up to Rs. 40,000 for micro irrigation equipment!

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.