தமிழக மீனவர்கள் மீதான இலங்கைத் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருவது குறித்து கவலை தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்த விவகாரத்தில் தலையிடக் கோரி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது கடிதத்தில், பிப்ரவரி 15 ஆம் தேதி, நம்பியார் நகரைச் சேர்ந்த 6 பேர் கொண்ட குழுவினர் மீது, நாட்டுப் படகில் கடலுக்குச் சென்ற இந்திய மீனவர்கள் மீது சமீபத்திய தாக்குதல் நடந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். தோப்புத்துறைக்கு கிழக்கே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, மூன்று மீன்பிடி படகுகளில் வந்த சுமார் 10 இலங்கையர்கள் அவர்களது படகை சுற்றி வளைத்து, இரும்பு கம்பிகள், தடிகள் மற்றும் கத்திகளால் இந்திய மீனவர்களை தாக்கியுள்ளனர்.
இவ்வாறு, தமிழக மீனவர்கள் மீதான இலங்கையின் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கவலை தெரிவித்திருத்து இருக்கிறார். அதோடு, இந்த சம்பவத்தினைத் தொடர்ந்து இதில் ஜெயசங்கர் தலையிட்டு தகுந்த முடிவு எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
படகில் இருந்து வாக்கி டாக்கி, ஜிபிஎஸ் கருவி, பேட்டரி மற்றும் சுமார் 200 கிலோ மீன்கள் உள்ளிட்ட சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களையும் இலங்கை பிரஜைகள் எடுத்துச் சென்றதாக அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக GH க்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த தாக்குதல் சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவதை சுட்டிக்காட்டுவதில் வேதனை அடைவதாகவும், இனிவரும் காலங்களில் இதுபோன்ற வன்முறைகள் நடைபெறாமல் இருக்க, இந்திய அரசு, இலங்கை அரசிடம் இதை அவசரமாக எடுத்துரைத்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க
1 கோடி குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000! தமிழக முதல்வர் உத்தரவு!!