தேனி மாவட்டம் சின்னமனூர் சுற்றுவட்டாரப் பகுதியில் சுமார் 30 ஏக்கரில் வெற்றிலை விவசாயம் செய்யப்பட்டு வரும் நிலையில், சின்னமனூர் வெற்றிலை பேட்டை மூலம் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு வெற்றிலை வணிகம் நடைபெற்று வருகிறது.
வெற்றிலை விவசாயம்
சுப முகூர்த்தங்கள், இல்ல நிகழ்வுகள், விசேஷ பண்டிகைகள், திருமணம், கோயில் பூஜைகள், கோயில் திருவிழாக்கள் உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளிலும் வெற்றிலைக்கு முக்கிய பங்கு உண்டு. விழா நாட்கள் வெற்றிலையில் முடியாமல் நிறைவு பெறாது என பெரியோர்கள் பேச்சு வழக்கில் கூறுவது உண்டு. வெற்றிலை சாகுபடியில் தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதி எப்போதும் முக்கிய பங்காற்றி வருகிறது. தேனி மாவட்டத்தில் பெரியகுளம், ஜெயமங்கலம், வடுகபட்டி, சின்னமனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெற்றிலை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
தொடர்ந்து பல்வேறு காரணங்களால் தேனி மாவட்டத்தில் வெற்றிலை சாகுபடி செய்வதற்கான பரப்பளவு குறைந்து வந்தாலும், இன்றளவும் வெற்றிலை சாகுபடியை கைவிடாமல் சின்னமனூர் பகுதி விவசாயிகள் வெற்றிலை விவசாயத்தை செய்து வருகின்றனர்.
வெற்றிலை வணிகத்திற்காகவே சின்னமனூர் பகுதியில் வெற்றிலை பேட்டை இயங்கி வருகிறது. சின்னமனூர் சுற்றுவட்டார பகுதிகளில் வெற்றிலை சாகுபடி செய்யும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஒன்றிணைந்து உருவாகியுள்ள சங்கம் வெற்றிலை பேட்டை என அழைக்கப்படுகிறது. தேனி மாவட்டத்தில் பல இடங்களில் வெற்றிலை பேட்டை இயங்கி வந்தாலும் சின்னமனூர் பகுதியிலேயே பெரிய அளவில் வெற்றிலை பேட்டை இயங்கி வருகிறது .
சின்னமனூர் சுற்றுவட்டார பகுதிகளில் வெற்றிலை விவசாயம் செய்யும் விவசாயிகளிடமிருந்து வெற்றிலை அறுவடைக்கு தயாராக இருக்கும் நிலையில் சின்னமனூர் வெற்றிலை பேட்டையில் உறுப்பினராக உள்ள வெற்றிலை வியாபாரிகள் தங்களது ஆட்களை வைத்து வெற்றிலை தோட்டத்திற்கு சென்று தோட்டத்திலேயே வெற்றிலையை பறித்து வருகின்றனர்.
மேலும் படிக்க:
பயணிகளுக்கு செப்டம்பர் 25 வரை விமானத்தில் இலவச பயணம்-ஏன்?
விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டார் முதல்வர், காரணம் என்ன?