இந்தியாவில், கிறிஸ்துமஸ் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்கும் விதமாக தேவாலயங்கள் மட்டுமின்றி வீடுகள், வணிக வளாகங்கள் என அனைத்து இடங்களிலும் நட்சத்திரங்கள் மற்றும் கிறிஸ்துமஸ் குடில்கள் அமைப்பார்கள். மேலும் வண்ண விளக்குகள் மூலம் கட்டிடங்களை ஜொலிக்க வைப்பார்கள். தீபாவளி போன்றே, இந்த மார்கழி மாதத்தில் விளக்குகள் ஜோலிக்கும். இதில் இருக்கும் ஒரே வித்தியாசம் தீபாவளியில் தீப விளக்குகள் ஜோலிக்கும், கிறிஸ்துமஸில் நட்சத்திர விளக்குகள் ஜோலிக்கும்.
அதிலும் கிறிஸ்துமஸ் குடில்களை பொறுத்தவரை ஊருக்கு ஊர் இளைஞர்கள் போட்டி போட்டு சுற்றுலா தலங்கள் போன்று பொதுமக்களை கவரும் வகையில் வித்தியாசமாக அமைத்து கொண்டாடுவர்.
அந்த வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக, கொரோனா தோற்று காரணமாக, கிறிஸ்துமஸ் பண்டிகையில் உர்ச்சாகம் பேருமளவு காணப்படவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு கொரோனா தோற்று தடுப்பு நடவடிக்கைகளுடன் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், கன்னியகுமரி மாநிலத்தின் பாலப்பள்ளம் பகுதியில் உள்ள இளைஞர்கள் இந்த ஆண்டு ரூ.20 லட்சம் மதிப்பில் பாபிலோன் தொங்கும் தோட்டம் வடிவில் பிரம்மாண்ட குடில் ஒன்றை அமைத்து ஆட்ச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளனர்.
இந்த பிரம்மாண்ட கிறிஸ்துமஸ் குடில் நேற்று இரவு(23-12-2021) திறக்கப்பட்டது. குடிலை மத்திக்கோடு சேகரத்து சபை ஆயர் ஸ்டீபன் திறந்து வைத்தார்.
இந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்ச்சியில், ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ, மத்திக்கோடு சேகரத்து துணை ஆயர் ஸ்டீபன்ராஜ், கிறிஸ்துபுரம் சபை ஆயர் ஹரால்டு அனித், சகாயநகர் பங்குபணியாளர் ஆரோக்கிய ஜோஸ், வின் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் அன்ட் ஜீவன் சேரிட்டி தலைவர் சதீஷ், செயலாளர் பாலகிருஷ்ணன், பொருளாளர் ஹெல்டன் செல்வகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த குடில் இன்று காலை முதல் பொதுமக்கள் பார்வைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை வின்ஸ்டார் ஸ்போட்ஸ்கிளப் மற்றும் ஜீவன் சேரிட்டி அமைப்பினர் செய்துள்ளனர்.
தமிழகம் மட்டுமின்றி கொல்கத்தா நகரின் முக்கிய பகுதியில் கிறிஸ்துமஸ் பண்டிகை விழா கோலம் பூண்டுள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பூங்கா வீதியில், 50 அடி உயரம் கொண்ட பிரமாண்ட கிறிஸ்துமஸ் மரம், கண்களை கவரும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. இம் மரம் இரவு நேரத்தில் வண்ண விளக்குகளால் ஒளி வெள்ளத்தை பாய்ச்சும். கிறிஸ்துமஸ் மரம் மட்டுமில்லாமல் 7 அடி உயரத்தில் கிறிஸ்துமஸ் தாத்தாவின் உருவம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன், கிறிஸ்துமஸ் பண்டிகையின் கொண்டாட்டம் நேற்று முதல் தொடங்கியுள்ளது. இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.'
மேலும் படிக்க: