1. வெற்றிக் கதைகள்

நிழல் வலை குடில் அமைத்து காய்கறி நாற்றுகளை உருவாக்கி அசத்துகிறார் விவசாயி பால்ராஜ்!

R. Balakrishnan
R. Balakrishnan
Vegetable Plants
Credit : Dinamalar

ஐம்பது சதவீத மானியத்தில் தோட்டக்கலை துறையினர் அமைத்து தந்த நிழல்வலை குடில் மூலம் லாபம் கிடைத்ததால், மற்றொரு நிழல்வலை குடில் அமைத்து காய்கறி நாற்று உற்பத்தி செய்கிறார், திருமங்கலம் ஏ.கொக்குளம் பஞ்சாயத்தைச் சேர்ந்த விவசாயி பால்ராஜ்.

காய்கறி நாற்று

காய்கறி நாற்றுகளை உற்பத்தி செய்து விற்பதன் மூலம் லாபம் ஈட்டும் முறையை விவரித்துள்ளார். இரண்டு ஏக்கரில் காய்கறி நாற்று நட்டு காய்கறி பயிர்களை சாகுபடி (cultivation) செய்கிறார். ஒரு ஏக்கரில் சாகுபடியும் ஒரு ஏக்கரில் திறந்தவெளி மேட்டுப்பாத்தியில் நாற்றும் நடவு செய்கிறார். நிலத்தை உழுது மாட்டுச்சாணம் (Cow dung) போட்டு, அதை ஒரு மாதம் காயவிட்டு மறுபடியும் உழுவேன். மேட்டுப்பாத்தியில் 5க்கு 3 அடியில் 2500 நாற்றுகளுக்கு விதை பாவினால் 1500 நாற்றுகள் தரமாக இருக்கும். பாதி முளைக்காது. திருமங்கலம் தோட்டக்கலை துறை அலுவலகத்தில் ஆலோசனை கேட்டேன்.

நிழல்வலை குடில்

ஒருங்கிணைந்த தோட்டக்கலை வளர்ச்சி இயக்கம் மூலம் நிழல்வலை குடில் அமைக்க மானியம் (Subsidy) கிடைத்தது. ஆயிரம் சதுர மீட்டரில் நிழல்வலை குடில் அமைத்து தந்தனர். 7.42 லட்ச ரூபாய் செலவானது. அரசு ரூ.3.55 லட்சம் மானியமாக தந்தது. ட்ரே, விதை, தேங்காய் நார்த்துகள்கள், அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா உயிர் உரங்கள் அனைத்தையும் அரசே இலவசமாக வழங்கியது.

தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் பிரபா ஆலோசனையின் பேரில் பூஞ்சுத்தியில் உள்ள அரசு தோட்டக்கலை பண்ணைக்கு சென்று நிழல்வலை குடிலில் காய்கறி நாற்றுகள் வளர்ப்பு பற்றி ஒருவாரம் பயிற்சி பெற்றேன்.

குழித்தட்டுகளில் தேங்காய் நார்த்துகளை நிரப்பி அதில் தக்காளி, கத்தரி விதைகளை இட்டு ஐந்து நாட்களும் மிளகாய் விதைகளை 7 நாட்களும் பாலித்தீன் சீட்டால் மூடிவைக்க வேண்டும். அதன் பின் நிழல் வலை குடிலுக்கு குழித்தட்டுகளை மாற்றிவிடுவேன். 5க்கு 3 அடியில் 2600 நாற்றுகள் உற்பத்தி செய்கிறேன். ஒரு குழித்தட்டில் 98 நாற்றுகள் உற்பத்தியாகும். கத்தரி, தக்காளி, மிளகாய் நாற்றுகளை 25 - 35 நாட்களில் விற்பனைக்கு கொடுத்துவிடுவேன்.ஒருநாற்று 25 காசுக்கு அரசிடம் விற்கிறேன்.

தோட்டக்கலை அலுவலர்கள் மூலம் அனுமதி ரசீது பெறும் விவசாயிகள் நேரடியாக இங்கு வந்து நாற்றுகளை பெறுகின்றனர். மாதம் 3 லட்சம் நாற்றுகள் உற்பத்தியாகிறது. எனது செலவில் மற்றொரு நிழல்வலை குடில் அமைத்து நர்சரி நாற்றுகளை உற்பத்தி செய்கிறேன் என்றார்.

தொடர்புக்கு
73058 48527.

மேலும் படிக்க

நேரம் குறிப்பிட்டு மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை!

ஆடிப்பட்டம் தேடி விதைத்தால், அதிக மகசூல் நிச்சயம்!

English Summary: Farmer Balraj builds a shade net hut and creates vegetable seedlings! Published on: 29 July 2021, 07:33 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.