தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் மே 5ம் தேதியும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மே 6 ம் தேதியும் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் கடந்த 2 ஆண்டுகளாக தமிழக மக்கள் பெரும் பாதிப்பைச் சந்தித்தனர். பள்ளிகள் மூடப்பட்டதால், பொதுத்தேர்வுகள் நடத்தப்பட வில்லை. 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் ஆல் பாஸ் செய்யப்பட்டனர்.
அரசு எடுத்த தீவிர முயற்சியின் பயனாக, கொரோன வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்ததையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் முதல் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், இந்த ஆண்டு 10 மற்றும் 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு எப்போதுத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியப் பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாவது:
பொதுத் தேர்வு
பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வானது ஏப்ரல் 25 முதல் மே 2ம் தேதி வரை நடக்கும். பிளஸ் 2 மாணவர்களுக்கு மே 5 முதல் மே 28 வரையும், பிளஸ் 1 மாணவர்களுக்கு மே 9 முதல் மே 31 வரையிலும்,10ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 6 முதல் மே 30 வரையிலும் பொதுத்தேர்வு நடக்கும்.
பிளஸ் 2 மாணவர்களுக்கு ஜூன் 23ம் தேதியும், பிளஸ் 1க்கு ஜூன் 7ம் தேதியும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 17 ம் தேதியும் தேர்வு முடிவுகளை வெளியிடத் திட்டமிட்டுள்ளோம். பொதுத்தேர்வு முடிந்த பின்னர் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான வகுப்புகள் ஜூன் 20ம் தேதியும், பிளஸ் 1 மாணவர்களுக்கு ஜூன் 24லும் வகுப்புகள் துவங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
எந்தெந்த தேதியில் என்னென்ன பரீட்சை என்பதை tnschools.gov.in என்ற இணைய தளத்தில் மாணவர்களுடைய பார்வைக்கு வெளியிடப்படும். அது மட்டுமின்றி tge.tn.gov.in என்ற இணைய தளத்திலும் வெளியிடப்படும் என்றார்.
தேர்வுகள் முடிந்தபிறகு 2022-2023 பள்ளி கல்வி ஆண்டுக்காக 1 முதல் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான வழக்கமான வகுப்புகள் 20.6.22 முதல் தொடங்கும். 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகள் 24.6.2022 முதல் தொடங்க உள்ளது. பிளஸ்-1 வகுப்புகளுக்கு ரிவிஷன் டெஸ்ட் இப்போது முதல் பொதுத்தேர்வு வரை நடைபெறும்.
மேலும் படிக்க...
சர்க்கரை ரொம்பப் பிடிக்குமா? புற்றுநோய்க்கு வாய்ப்பு அதிகம்!
இரவில் தூங்கும் முன்பு 2 கிராம்பு+Hot water- ஆச்சர்யப்படுத்தும் நன்மைகள்!