பருவநிலை மாற்றத்தால், மனிதர்களின் வாழ்வாதாரம் மற்றும் சுகாதாரத்திற்கு பிரச்னை ஏற்படுவதால், பயிர்களும் பாதிக்கப்படுகின்றன என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். ஊட்டச்சத்து குறைபாட்டை எதிர்கொள்ளும் சிறப்பு பண்புகள் கொண்ட 35 பயிறு வகைகளை பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்தார்.
பருவ மாற்றம்
பின்னர் நரேந்திர மோடி பேசியதாவது: கடந்த 6 முதல் 7 ஆண்டுகளாக விவசாயத்துறை சந்திக்கும் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்கள் முன்னுரிமை வகிக்கின்றன. குறிப்பாக பருவங்கள் மாறும்போதும், புதிய சூழ்நிலைகளுக்கு ஏற்பவும், வீரியமிக்க விதைகளுக்கு நாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். கடந்த கோவிட் காலத்தில், பல மாநிலங்களில் வெட்டுக்கிளிகள் பயிரை சேதப்படுத்தும் பிரச்னை ஏற்பட்டது. பல கட்ட நடவடிக்கைகளுக்கு பிறகு, இந்த பிரச்னை முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. விவசாயிகளுக்கு பெரிய இழப்பு ஏற்படுவது தடுக்கப்பட்டது.
சுகாதார அட்டைகள்
பாதுகாப்பும், உத்தரவாதமும் கிடைக்கும் போது, விவசாய துறை வளர்ச்சி பெறும். விவசாயிகளின் நிலங்களை பாதுகாக்க, 11 கோடி மண் சுகாதார அட்டைகள் வழங்கப்பட்டு உள்ளன. பருவநிலை மாற்றத்தால், புதிய நோய்களும், தொற்றுகளும் உருவாகின்றன. இது மனிதர்களின் வாழ்வாதாரம் மற்றும் சுகாதாரத்திற்கு பெரிய பிரச்னையாக மாறுகின்றன. பயிர்களையும் இது பாதிக்கிறது. இந்த விவகாரத்தில் தொடர்ச்சியாக ஆய்வு நடத்தப்பட வேண்டும்.
அரசு, அறிவியல் மற்றும் சமூகம் இணைந்து செயல்படும்போது, சிறந்த முடிவுகள் கிடைக்கும். விவசாயிகள் மற்றும் விஞ்ஞானிகள் இணைந்து செயல்படுவது, புதிய சவால்களை சந்திக்க நாட்டிற்கு பலன்களை கொடுக்கும்.
மேலும் படிக்க
காய்கறி உரத்தில் கலப்படம்: கவலையில் விவசாயிகள்!
பிரதமர் மோடி வந்தால் தான் தடுப்பூசி போடுவோம்: பழங்குடியின தம்பதி பிடிவாதம்!