1. மற்றவை

பிரதமர் மோடி வந்தால் தான் தடுப்பூசி போடுவோம்: பழங்குடியின தம்பதி பிடிவாதம்!

R. Balakrishnan
R. Balakrishnan

We will vaccinate only if Prime Minister Modi comes

மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரு மலைக் கிராமத்தில், 'கொரோனா தடுப்பூசி  (Corona Vaccine) போட்டுக் கொள்ள வேண்டுமென்றால் பிரதமர் மோடி இங்கு வர வேண்டும்' என பழங்குடியின தம்பதி அடம்பிடித்ததால் மருத்துவ ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பிடிவாதம்

இம்மாநிலத்தில் அனைவருக்கும் முதல் தவணை தடுப்பூசி (First Dose Vaccine) செலுத்துவதை இலக்காக வைத்து தீவிர முகாம்கள் நடத்தப்படுகின்றன. இங்குள்ள தார் மாவட்டத்தில் கிகார்வாஸ் என்ற கிராமத்தில் பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். இங்கு வசிக்கும் ஒரு தம்பதியை தவிர அனைவருக்கும் முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. மருத்துவ ஊழியர்கள் நேற்று அந்த கிராமத்துக்கு சென்றனர்.

ஆனால் அந்த தம்பதி, தாங்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டுமென்றால் யாராவது பெரிய அதிகாரிகள் வர வேண்டும் என அடம் பிடித்தனர். அதிலும், கணவர் இதில் ரொம்பவே பிடிவாதமாக இருந்தார். 'கலெக்டரை வர சொல்லட்டுமா' எனக் கேட்டதற்கு, 'பிரதமர் நரேந்திர மோடி (PM Modi) தான் வர வேண்டும். அவர் முன்னிலையில் தான் தடுப்பூசி போட்டுக் கொள்வேன்' என, அவர் கண்டிப்புடன் கூறினார்.

ஏமாற்றம்

இதைக் கேட்டு மருத்துவ ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, ஒருங்கிணைப்பாளர் மனோஜ் துபே அந்த கிராமத்துக்கு வந்து பேசிப் பார்த்தார். ஆனால் அவர் விடாப்பிடியாக இருந்தார். இதையடுத்து, மருத்துவ ஊழியர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

மேலும் படிக்க

கொரோனாத் தொற்றுக்கு பூஸ்டர் டோஸ் எப்போது போட வேண்டும்?

ஆன்டிபயாடிக் மருந்துகளை அதிகம் உட்கொண்டால் ஆபத்து!

English Summary: We will vaccinate only if Prime Minister Modi comes: Tribal couple stubborn!

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.