News

Friday, 05 August 2022 11:39 AM , by: R. Balakrishnan

Coffee Export

இந்தியாவின் காபி ஏற்றுமதி தொடர்ந்து உயர்ந்துகொண்டே போகிறது. இந்நிலையில் 1960-61ஆம் ஆண்டைல் இருந்து 2020-21ஆம் ஆண்டு வரை இந்தியாவின் காபி ஏற்றுமதி அளவு 16 மடங்கு உயர்ந்துள்ளதாக மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் (PIB) தகவல் வெளியிட்டுள்ளது.

காஃபி ஏற்றுமதி (Coffee Export)

மதிப்பு அடைப்படையில் பார்த்தால், 1960-61ஆம் ஆண்டு முதல் 2020-21ஆம் ஆண்டு வரை இந்தியாவின் காபி ஏற்றுமதி மதிப்பு 760 மடங்கு உயர்ந்துள்ளது. 2021-22 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் காபி ஏற்றுமதி முதல்முறையாக 100 கோடி டாலரை தாண்டியுள்ளது. 2020ஆம் ஆண்டில் உலகின் ஏழாவது மிகப்பெரிய காபி உற்பத்தியாளராக இந்தியா இருந்துள்ளது என உலகப் பொருளாதார மன்றம் தெரிவித்துள்ளது.

காபி உற்பத்தியாளர்களும், காபி ஏற்றுமதியாளர்களும் இணைந்து இந்தியாவின் காபி ஏற்றுமதியை 100 கோடி டாலருக்கு மேல் உயர்த்திவிட்டதாக மத்திய வர்த்தக துறை அமைச்சர் பியூஷ் கோயல் அண்மையில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 2021-22ஆம் ஆண்டில் இந்தியாவின் காபி ஏற்றுமதி 42% உயர்ந்துள்ளதாகவும், காபி ஏற்றுமதி மதிப்பு 100 கோடி டாலரை தாண்டிவிட்டதாகவும் அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்திருந்தார். 2011-12ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை இந்தியாவின் காபி ஏற்றுமதி தொடர்ந்து சரிந்தது வந்தது. இந்நிலையில், 2021-22இல் ஒரே ஆண்டில் 42% உயர்ந்துள்ளது.

உலகின் முதல் 10 முன்னணி காபி உற்பத்தி நாடுகளில் இந்தியாவும் இடம் பிடித்துள்ளது. இந்தியாவில் காபி உற்பத்தியில் கர்நாடகா (70%) முதலிடத்திலும் கேரளா (23%) இரண்டாம் இடத்திலும், தமிழ்நாடு மூன்றாம் இடத்திலும் உள்ளது. இந்தியாவின் மொத்த உற்பத்தியில் தமிழகத்தில் 6% பங்கு உண்டு. தமிழகத்தின் மொத்த காபி உற்பத்தியில் நீலகிரி மாவட்டத்துக்கு சுமார் 50% பங்கு உள்ளது.

மேலும் படிக்க

ஆவின் குடிநீர் திட்டத்தை தொடங்க பால்வளத்துறை முடிவு!

விவசாயிகளுக்கு டிராக்டர்: முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)