இந்தியாவின் பணக்கார விவசாயி: RFOI விருதினை வென்ற குஜராத் பெண்! விவசாயத்தில் மட்டும் 50 கோடி.. RFOI விருதினை வென்ற யுவராஜின் வெற்றிக் கதை! நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 10 February, 2021 4:22 PM IST

தேங்காய் பொருட்களை பதப்படுத்தும் நிறுவனம் அமைக்க ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்துள்ளார், தேங்காய் சார்ந்த உணவுப் பொருட்களை பதப்படுத்தும் நிறுவனம் அமைக்க விரும்பும் தொழில்முனைவோர் மானியம் பெற விண்ணப்பிக்கலாம் எனவும் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக ஆட்சியர் கு.ராசாமணி வெளியிட்ட செய்திக் குறிப்பில், அமைப்பு சாரா உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களை வலுப்படுத்தும்விதமாக மத்திய அரசின் ‘ஆத்மநிர்பார் பாரத் அபியான்’ திட்டத்தின்கீழ் ஒரு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் 60% நிதி, மாநில அரசின் 40 சதவீத பங்களிப்புடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

மானியம் பெறுவதற்கான நிபந்தனைகள்

இத்திட்டத்தின்கீழ், ஏற்கெனவே உள்ள தொழில் விரிவாக்கத்துக்காக விண்ணப்பிக்கும் நிறுவனங்கள் தேங்காய் சார்ந்த பொருட்கள் பதப்படுத்துதல், பிற உணவு பதப்படுத்தும் தொழில்களுக்கு விண்ணப்பிக்க முடியும். அதற்கு விண்ணப்பதாரர் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். நிறுவனத்தில் 10 தொழிலாளர்களுக்கு குறைவாக பணிபுரிய வேண்டும்.

பதப்படுத்தும் நிறுவனம் தொடங்க ரூ.10 லட்சம்

இதுதவிர, புதிதாக தேங்காய் பொருட்கள் பதப்படுத்தும் குறுந்தொழில்கள் தொடங்கவும் மானியத்துடன் கடன் வழங்கப்படுகிறது. அதற்கு திட்ட மதிப்பீட்டில் 35 சதவீதம் (அதிகபட்சம் ரூ.10 லட்சம்) மானியமாக வழங்கப்படுகிறது. பயனாளிகளின் சொந்த முதலீடு திட்ட மதிப்பீட்டில் 10 சதவீதம் இருக்க வேண்டும். மீதமுள்ள தொகை வங்கியில் இருந்து கடனாக வழங்கப்படும்.

 

விண்ணப்பிப்பது எப்படி?

தற்போது மாவட்ட அளவில் இயங்கிவரும் தேங்காய் சார்ந்த பொருட்கள் பதப்படுத்தும் குறு நிறுவனங்கள், புதிதாக ஈடுபட உள்ள குறு நிறுவனங்கள், விருப்பமுள்ள தனி நபர்கள் இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்க www.pmfme.mofpi.gov.in என்ற இணையதள முகவரியிலோ அல்லது மாவட்ட தொழில் மையத்தில் செயல்பட்டுவரும் இலவச பொது வசதி மையம் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். சந்தேகங்களை 9994208829, 9788769890 என்ற எண்களில் தொடர்புகொண்டு கேட்கலாம். இவ்வாறு ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

கால்நடை & மீன்வளத்துறைக்கு சுமார் 12 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட கட்டிடங்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்!

வேளாண் இயந்திரமயமாக்கலை ஊக்குவிப்பதற்கான இந்திய அரசின் திட்டங்கள்!

வெளிநாட்டுக்கு ஏற்றுமதி இல்லாததால் இறால் விலை கடும் வீழ்ச்சி!

English Summary: Coimbatore Collector's announced Rs 10 lakh Subsidy to set up coconut processing company
Published on: 10 February 2021, 04:22 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now