News

Tuesday, 28 March 2023 01:35 PM , by: Muthukrishnan Murugan

Complaints can be made about pollution caused by industries

தொழிற்சாலைகளின் செயல்பாட்டினால் ஏற்படும் மாசு தொடர்பான குறைகளை தெரிவிக்கலாம் என விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப. தெரிவித்துள்ளார்.

சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரை கிளையானது நீதிப் பேரணை எண் : 2679/2023-ல் மாநில மாசு கட்டுப்பாடு வாரியமானது, பொதுமக்களின் குறைகளைத் தெரிவிக்க குறை தீர்ப்பு மையம் ஒன்றை அமைக்க வேண்டுமெனவும், அதிலுள்ள அதிகாரிகளின் தொடர்பு விவரங்களை பொது மக்கள் அறியும் வண்ணம் தெரியப்படுத்த வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியமானது, தொழிற்சாலைகளினால் ஏற்படும் மாசு தொடர்பான பொது மக்களின் குறைகளை இணையதளம் வழியாக தெரிவிக்க ஏற்கனவே (https://tnpcb.gov.in/pcbolgprs) என்ற இணையதளத்தை துவக்கியுள்ளது என்பதும், மேலும் பொது மக்கள் தங்களது குறைகளை நேரிடையாகத் தெரிவிக்க, ஒவ்வொரு மாதம் 5 ஆம் தேதியன்று நேர்காணல் (Open House) நிகழ்ச்சியானது தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய மாவட்ட சுற்றுசூழல் பொறியாளர் அலுவலகங்களில் நடைபெற்று வருகிறது என்பதும் இதன் மூலம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

மேலும், விருதுநகர் மாவட்டத்தில் பொது மக்கள் தொழிற்சாலைகளின் செயல்பாட்டினால் ஏற்படும் மாசு தொடர்பான குறைகளை மாவட்ட சுற்றுசூழல் பொறியாளர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், எண். 23, மாவட்ட ஆட்சியர் வளாகம், விருதுநகர் - 626 002.  Ph: 04562- 252442. மற்றும் மின்னஞ்சல்: deevdr@tnpcb.gov.in என்ற முகவரிக்கு கடிதம் மூலமாகவோ அல்லது தொலைபேசி மூலமாகவோ தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.

இதைப்போல் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டுத்திட்டம் குறித்த குறைதீர்கூட்டம் வரும் மார்ச் மாதம் 30 ஆம் தேதி நடைப்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஆட்சியர் வெளியிட்டுள்ள தகவல்கள் பின்வருமாறு-

மாவட்ட ஆட்சியர் உத்தரவுப்படி புதிய மருத்துவக் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கான மருத்துவ செலவினத் தொகையை திரும்பக்கோரும் இனங்களின் மீது தீர்வு காணும் பொருட்டும், மனுக்கள் மற்றும் அசல் ஆவணங்கள் விடுபட்ட மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுத்திடவும் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான புதிய மருத்துவக்காப்பீட்டுத்திட்டம் குறித்த குறைதீர் கூட்டம் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் 30.03.2023 அன்று பிற்பகல் 04.30 மணியளவில் நடைபெற உள்ளது.

அரசு ஊழியர்கள் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து அதன் மீது மாவட்ட மருத்துவம் ஊரகநலப்பணிகள் மற்றும் குடும்ப நலம் இணை இயக்குநர் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனத்தால் ஆவணங்கள் கோரப்பட்டிருக்கும் பட்சத்தில் மேற்படி கூட்டத்தில் தகுந்த ஆவணங்களுடன் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் கேட்டுக் கொள்கிறார் என கூறப்பட்டுள்ளது.

மேலும் காண்க:

ஏறுன வேகத்தில் இறங்கிய தங்கத்தின் விலை- பொதுமக்கள் நிம்மதி

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)