ஒரு லட்சம் பரிசு- பசுமை சாம்பியன் விருது பெற யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
Who can apply for the Green Champion Award with prize money of one lakh

2022 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருதுக்கு தனிநபர்கள்/ நிறுவனங்கள்/ அமைப்புகள் விண்ணப்பிக்கலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசின் சார்பில் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் தங்களை முழுமையாக அர்ப்பணித்து செயல்பட்ட தனிநபர்கள்/அமைப்புகளுக்கு பசுமை சாம்பியன் விருது  வழங்கப்பட உள்ளது. 100 நபர்கள் தேர்ந்தெடுக்கப்படும் நிலையில், தலா ரூ.1,00,000/- வீதம் பண முடிப்பும் பரிசாக வழங்கப்பட உள்ளது.

இதனடிப்படையில் நாமக்கல் மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வை சிறப்பாக செயல்படுத்திய நிறுவனங்கள்/ கல்வி நிறுவனங்கள்/ குடியிருப்போர் நல சங்கங்கள்/ தனிநபர்கள்/ உள்ளாட்சி அமைப்புகள்/ தொழிற்சாலைகளுக்கு பசுமை சாம்பியன் விருது வழங்கப்படும் என ஆட்சியர் அறிவித்துள்ளார். விருதினை பெற கீழ்க்காணும் ஏதேனும் ஒரு பிரிவில் தங்களது சேவையினை வழங்கியிருத்தல் வேண்டும் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு-

 1. சுற்றுச்சூழல் கல்வி மற்றும் பயிற்சி
 2. சுற்றுச்சூழல் விழிப்புணர்வு
 3. சுற்றுச்சூழல் பாதுகாப்பு
 4. பசுமை தயாரிப்புகள் / பசுமை தொழில்நுட்பம் தொடர்பான விஞ்ஞான ஆய்வுகள்
 5. நிலைத்தகு வளர்ச்சி
 6. திடக்கழிவு மேலாண்மை
 7. நீர் மேலாண்மை மற்றும் நீர் நிலைகள் பாதுகாப்பு
 8. காலநிலை மாற்றத்திற்கு உட்படுதல் மற்றும் தணிப்பு நடவடிக்கை
 9. காற்று மாசு குறைத்தல்
 10. பிளாஸ்டிக் கழிவுகளின் மறுசுழற்சி மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கை
 11. சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு மற்றும் பாதுகாப்பு
 12. கடற்கரை பாதுகாப்பு நடவடிக்கை

தகுதி வாய்ந்த 100 தனி நபர்கள் / நிறுவனங்களை ஒவ்வொரு வருடமும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், மாவட்ட ஆட்சியரின் தலைமையில் அமைக்கப்பட்ட பசுமை சாம்பியன் விருது தேர்வு செய்யும் குழு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கான விண்ணப்ப படிவம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய இணையதளத்தில் (www.tnpcb.gov.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும் கூடுதல் தகவல்கள் தேவைப்படுவோர் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், நாமக்கல் அவர்களை அணுகலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்க 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் நாள் கடைசி நாள் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் பல்வேறு நிறுவனங்கள், அமைப்புகள், தனிநபர்கள் விருது பெற விண்ணப்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சமூக சேவை ஆர்வலர்களும் இந்த வாய்ப்பினை தவறவிடாது விருது பெற விண்ணப்பிக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:

அப்படி போடு..புவிசார் குறியீடு பெற்ற இலவம்பாடி கத்தரி,ராம்நாடு முண்டு மிளாகாய்

English Summary: Who can apply for the Green Champion Award with prize money of one lakh Published on: 26 February 2023, 10:48 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.