க்ரிஷி ஜாக்ரான் மற்றும் Agriculture world இணைந்து மில்லியனர் ஃபார்மர் ஆஃப் இந்தியா (MFOI) விருது வழங்கும் நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளது. விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி தேதி (நவ-11) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதனைத் தொடர்ந்து 3 நாட்கள் நடைப்பெற உள்ள வேளாண் கண்காட்சி குறித்த சில முக்கிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளது.
உலகின் முதன்மையான தொழிலாக கருதப்படுவது வேளாண் தொழில். இன்று விவசாயிகள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வரும் நிலையில், வேளாண் துறையில் சிறந்து விளங்கும் விவசாயிகளை கௌரவிக்கும் நோக்கத்தோடு MFOI விருது வழங்கும் நிகழ்வு அறிவிக்கப்பட்டது.
கடந்த ஜூலை மாதம் டெல்லியிலுள்ள சாணக்யபுரியில் உள்ள தி அசோக் ஹோட்டலில் MFOI விருது வழங்கும் நிகழ்விற்கான கோப்பை மற்றும் இலட்சினை வெளியிடும் நிகழ்வு ஒன்றிய கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா தலைமையில் பிரம்மாண்டமாக நடைப்பெற்றது.
MFOI வேளாண் கண்காட்சி:
வருகிற டிசம்பர் மாதம் 6, 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் டெல்லியில் வைத்து MFOI விருது வழங்கும் விழாவானது வேளாண் கண்காட்சியுடன் நடைப்பெற உள்ளது. வேளாண் தொழில் சார்ந்த நிறுவனங்களின் ஸ்டால்கள், வேளாண் அறிஞர்கள் அடங்கிய கருத்தரங்குகள், சாதனை விவசாயிகளுடனான கலந்துரையாடல் என பல்வேறு நிகழ்வுகள் நடைப்பெற உள்ள நிலையில் பார்வையாளர்களாக பங்கேற்க விரும்புபவர்கள் இணையம் மூலமாக முன்பதிவு செய்யலாம்.
பார்வையாளர்- முன்பதிவு செய்யும் வழிமுறைகள் பின்வருமாறு:
- https://mfoi.krishijagran.com/get-visitor-pass/ - இந்த லிங்கினை க்ளிக் செய்வதன் மூலம் முன்பதிவு செய்யும் பக்கத்திற்கு செல்லலாம்.
- உங்களது பெயர் , மொபைல் எண், இ-மெயில் முகவரி, பாலினம், மாநிலம் , மாவட்டம், கிராமம், பின்கோடு போன்றவற்றை உள்ளீடவும்
- நில உடைமையாளராக இருப்பின் எவ்வளவு நிலம் வைத்துள்ளீர்கள் என்பதை குறிப்பிடவும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் (other) என்கிற ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.
- பார்வையாளர் கட்டணம் ஒரு நபருக்கு, ஒரு நாளைக்கு ரூ.100 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- உங்களது தனிப்பட்ட தகவலை உள்ளீடு செய்தப்பின், ஆன்லைனில் பணம் செலுத்துவதற்கான ஆப்ஷன் திரையில் தென்படும்.
- அதனை க்ளிக் செய்து பணத்தை செலுத்துங்கள் (QR code scan, net banking , debit/credit card, wallet என அனைத்து ஆப்ஷன்களும் உள்ளன)
MFOI விருது வழங்கும் நோக்கத்தின் மூளையாக விளங்கும் க்ரிஷி ஜாக்ரன் ஊடகத்தின் நிறுவனர் மற்றும் முதன்மை ஆசிரியருமான எம்.சி. டொமினிக், நாட்டிற்கு உணவளிக்கும் அந்த ‘கௌரவமான கரங்களை’ அங்கீகரிக்கும் வகையில் இந்த முன்னெடுப்பினை மேற்கொண்டுள்ளார். வேளாண் சார்ந்து பல்வேறு நிகழ்வுகள் நடைப்பெற உள்ள நிலையில், பார்வையாளராக பங்கேற்று பயன்பெறுங்கள்.
இதையும் காண்க:
விவசாயிகளே- MFOI விருதுக்கு விண்ணப்பிக்க கடைசித் தேதி அறிவிப்பு !
TNAU சார்பில் விவசாயிகளுக்காக அடுத்தடுத்து 3 பயிற்சிகள்- முழு விவரம் காண்க