1. விவசாய தகவல்கள்

TNAU சார்பில் விவசாயிகளுக்காக அடுத்தடுத்து 3 பயிற்சிகள்- முழு விவரம் காண்க

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
TNAU

கோவையிலுள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் சார்பில் மாதந்தோறும் வேளாண் தொடர்பான விவசாய நுட்பம், மதிப்புக் கூட்ட முறைகள் குறித்து விவசாயிகளுக்கு, தொழில் முனைவோர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இந்த மாதம் தேனீ வளர்ப்பு, பூச்சிகளை வேட்டையாடும் மற்றும் ஒட்டுண்ணிகளின் உற்பத்தி அவற்றின் பயன்பாடு மற்றும் நோனி, தக்காளி, பப்பாளி ஆகியவற்றின் மதிப்பு கூட்டல் தொடர்பான பயிற்சி குறித்த அறிவிப்பினை TNAU வெளியிட்டுள்ளது. அவற்றின் விவரம் பின்வருமாறு-

தேனீ வளர்ப்பு குறித்து ஒரு நாள் பயிற்சி- தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோவையில் உள்ள வேளாண் பூச்சியியல் துறையின் சார்பில் ஒவ்வொரு மாதமும் "தேனீ வளர்ப்பு" குறித்த ஒரு நாள் பயிற்சி வழங்குகிறது. நவம்பர் 2023 மாதத்திற்கான பயிற்சி 06.11.2023 (திங்கட்கிழமை) அன்று வழங்கப்படும். தேனீ வளர்ப்பின் பல்வேறு அத்தியாவசிய அம்சங்கள் இப்பயிற்சியில் கற்றுத்தரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • தேனீ இனங்களின் அடையாளம் மற்றும் தேனீக்களின் சமூக அமைப்பு
  • இந்திய தேனீக்களை பெட்டிகளில் வளர்ப்பது, பொது மற்றும் பருவ மேலாண்மை
  • தேனீ தீவனம், குறுக்கு மகரந்தச் சேர்க்கை மூலம் பயிர்களின் மகசூல் அதிகரிப்பு
  • தேன் பிரித்தெடுத்தல்
  • தேனீக்களின் எதிரிகள் மற்றும் நோய்கள் மற்றும் அவற்றின் மேலாண்மை

ஒரு நாள் பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள், TNAU-வின் பூச்சியியல் துறையினை அணுகி காலை 9 மணிக்கு அடையாளச் சான்றிதழைக் காட்டி, பயிற்சிக் கட்டணமாக ரூ.590/-மட்டும் பயிற்சி நாளில் செலுத்த வேண்டும்.

பயிற்சி நேரம்: காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை. மேலும் விவரங்களுக்கு, பேராசிரியர் மற்றும் தலைவர், பூச்சியியல் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் 641 003. தொலைபேசி: 0422-6611214; மின்னஞ்சல்: entomology@tnau.ac.in - ஆகியவற்றின் மூலம் தொடர்பு கொள்ளவும்.

நோனி, தக்காளி மற்றும் பப்பாளி ஆகியவற்றில் மதிப்பு கூட்டல் பயிற்சி:

நோனி, தக்காளி மற்றும் பப்பாளியின் மதிப்பு கூட்டல் குறித்த இரண்டு நாள் பயிற்சி, (07.11.2023 மற்றும் 08.11.2023) ஆகிய தேதிகளில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின், வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், பின் அறுவடை தொழில்நுட்ப மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பயிற்சி திட்டத்தின் கீழ் நோனி, தக்காளி மற்றும் பப்பாளியை பின்வரும் மதிப்பு கூட்டப்பட்ட தயாரிப்புகளில் பதப்படுத்துதல் முறை கற்றுத்தரப்படும்.

  • நோனி - சாதாரண நோனி சாறு, ஜாம், ஸ்குவாஷ், ஊறுகாய்
  • தக்காளி- சாஸ், கெட்ச்அப், ப்யூரி, பேஸ்ட்
  • பப்பாளி - ஸ்குவாஷ், ஜாம், Tuti fruity

பயிற்சியில் இணைய ஆர்வமுள்ள நபர்கள் ரூ.1,770/- மட்டும் (ரூ.1500 + GST 18%) ) பயிற்சியின் முதல் நாளில் நேரில் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இதையும் படிங்க: ஆரஞ்ச் அலர்ட் உட்பட 19 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

பயிற்சி வழங்கப்படும் இடம்: அறுவடைக்குப் பின் தொழில்நுட்ப மையம், வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்-641003. பேருந்து நிறுத்தம்: கேட் எண்.07 (தாவரவியல் பூங்காவிற்கு எதிர் வாயில்), மருதமலை சாலை வழியாக TNAU.

மேலும் விவரங்களுக்கு, தொடர்பு கொள்ளவும்: பேராசிரியர் மற்றும் தலைவர், அறுவடைக்கு பிந்தைய தொழில்நுட்ப மையம், வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்- 641003. மின்னஞ்சல்: phte@tnau.ac.in அலைபேசி: 94885 18268.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோவையில் உள்ள வேளாண் பூச்சியியல் துறையில் 08.11.2023 (புதன்கிழமை) அன்று "வேட்டையாடும் மற்றும் ஒட்டுண்ணிகளின் வெகுஜன உற்பத்தி மற்றும் பயன்பாடு" குறித்த ஒரு நாள் பயிற்சியை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:

1.42 லட்ச கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை- அரசாணை வெளியீடு

விதைப்பு செய்ய இயலாமை இடர் கீழ் இழப்பீடு- அமைச்சர் தகவல்

English Summary: TNAU conducts 3 consecutive trainings for farmers Published on: 04 November 2023, 03:48 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.