News

Saturday, 12 February 2022 09:56 AM , by: Elavarse Sivakumar

தென் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டல சுழற்சி


மன்னார் வளைகுடா பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை, மற்றும் காரைக்கால் உள்ளிட்ட தென் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது.

தொடர் மழை காரணமாக ஒரு சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் பள்ளி மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வரவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், நாகப்பட்டினத்தில் 1-ம் முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கு வர உத்தரவு

அதேநேரத்தில் திருப்புதல் தேர்வு நடைபெறும் பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். இந்த உத்தரவு 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

மேலும் படிக்க...

தொடர் விடுறையில் மாணவர்கள்- பள்ளிக்கல்வித்துறைக்கே tough !

இனிமேல் வார சம்பளம்! ஊழியர்களுக்கு உச்சக்கட்ட மகிழ்ச்சி!!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)