1. மற்றவை

6 ஆண்டுகள்- கழுத்தில் டயருடன் அவதிப்பட்ட முதலை!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
6 years- Crocodile suffering with tire on neck!

ஒன்றல்ல, இரண்டல்ல, சுமார் 6 ஆண்டுகள், தன் கழுத்தில் சிக்கிக்கொண்ட டயருடன் ஒரு முதலை உயிர்வாழ்ந்திருக்கிறது. அடக் கொடுமையே எனப் புலம்புபவர்கள் இந்த முதலையைக் காண விரும்பினால், இந்தோனேஷியாவிற்குத்  நிச்சயம்போக வேண்டும். இந்தோனேஷியாவில் கழுத்தில் சிக்கிக் கொண்ட டயருடன் அவதிப்பட்ட முதலையிடம் இருந்து வெற்றிகரமான டயர் எடுக்கப்பட்டது.

பலூ நகரத்தில் உள்ள ஆற்றில் இருந்த முதலை ஒன்று இருசக்கர வாகனத்தின் டயர் கழுத்தில் சிக்கி அவதிப்பட்டு வந்தது. கடந்த 6 ஆண்டுகளாக சிக்கியிருந்த அந்தத் டயரை அகற்ற எடுக்கப்பட்ட பல்வேறு முயற்சிகளும் தோல்வியடைந்தன.

டயரை அகற்றுபவர்களுக்கு ரொக்கம் பரிசாக வழங்கப்படும் என பலூ நகர நிர்வாகம் அறிவித்திருந்தது. இதையடுத்து பலர் முயற்சி மேற்கொண்டனர். இந்நிலையில் டிலி என்பவர் சுமார் 3 வாரங்கள் முயற்சி செய்த பின் முதலையைப் பிடித்து அதன் கழுத்தில் இருந்த டயரை அகற்றியுள்ளார்.

6 ஆண்டுகளாகப் பட்டு வந்த அவதியில் இருந்துத் தப்பித்திருப்பதால், இந்த முதலை தற்போது நிம்மதி அடைந்திருக்கிறது. பிரச்னையில் இருந்து விடுதலை பெற்றால், மனிதர்களானாலும் சரி, விலங்குளானாலும் சரி, அந்த மகிழ்ச்சியைச் சொல்ல வார்த்தைகளே இல்லை

மேலும் படிக்க...

இனிமேல் வார சம்பளம்! ஊழியர்களுக்கு உச்சக்கட்ட மகிழ்ச்சி!!

அச்சதலான 10 அடி தோசை - சாப்பிட்டால் ரூ.71,000 பரிசு!

English Summary: 6 years- Crocodile suffering with tire on neck! Published on: 10 February 2022, 05:20 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.