நூலின் விலை ஏற்றத்தைத் தொடர்ந்து பருத்திக்கான இறக்குமதி வரி ரத்துச் செய்யப்பட்டுள்ளது. இவ்வறிவிப்புத் தமிழகப் பின்னலாடை நிறுவனங்களுக்கு மகிழ்ச்சியைத் தருவதாக அமைகிறது.
நூல் விலை ஏற்றத்தால் இறக்குமதி வரியை ரத்துச் செய்யத் தமிழகப் பின்னலாடை நிறுவனங்கள் வலியுறுத்தி வந்தன. வரியை ரத்துச் செய்ய வலியுறுத்தி வந்த நிலையில் இறக்குமதி வரியை ஒன்றிய அரசு ரத்துச் செய்துள்ளது.
தற்பொழுது பருத்தி இறக்குமதிக்கு 5 சதவீதம் அடிப்படை சுங்க வரியாகவும், 5 சதவீதம் விவசாய உள்கட்டமைப்பு மேம்பாட்டு வரியாகவும் விதிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பருத்தி, நூல் விலை தொடர்ந்து உயர்வதால் விலை உயர்வைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழகப் பின்னலாடை நிறுவனங்கள் தமிழக அரசிடமும், மத்திய அரசிடமும் கோரிக்கை வைத்திருந்தன.
இந்த கோரிக்கையைத் தொடர்ந்து மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. அந்த அறிவிப்பில் பருத்தி இறக்குமதிக்குச் சுங்க வரியில் இருந்து முழுமையாக விலக்கு அளிப்பதாகவும், இந்த சுங்க வரி விலக்கு செப்டம்பர் 30-ஆம் தேதி வரை தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வரி விலக்கு இன்று முதல் அமலுக்கு வருகின்றது.
மத்திய அரசின் உத்தரவால், சேலம், திருப்பூர், கரூர், நாமக்கல், கோவை, மதுரை முதலான நகரங்களில் உள்ள பின்னலாடை நிறுவனங்களின் உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வரும் காலங்களில் பின்னலாடைத் தொடர்பான வர்த்தகம் அதிகரிக்கும் என எதிர்ப் பார்க்கப்படுகிறது.
இந்த அறிவிப்பு ஜவுளித் தொழிலுக்குப் பயனுள்ளதாக இருக்கும். அதோடு நுகர்வோருக்கும் விலை குறையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இது போன்ற அறிவிப்புகள் ஜவுளி நிறுவனங்களுக்கும், நுகர்வோருக்கும் பெரும் நம்பிக்கையினைத் தருவனவாக இருக்கின்றன.
மேலும் படிக்க...
ரூ.9700க்கு விறக்கப்டும் பருத்தி, மகிழ்ச்சியில் பருத்தி விவசாயிகள்
பருத்தியின் அற்புதமான நன்மைகள், பயன்பாடு மற்றும் குணப்படுத்திபடும் நோய்கள்!