கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், தரிசு நிலத்தை சாகுபடி நிலமாக மாற்றும் பணி துணைவேந்தர் முனைவர்.நீ.குமார் தலைமையில் நடைபெற்றது.
பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள நெல் இனப்பெருக்க மையத்தைச் சார்ந்த ஒரு பகுதியில் அரை ஏக்கர் பரப்பளவு தரிசு நிலமாக (Barren land) காணப்பட்டது.
இதனை சாகுபடி நிலமாக (Cultivable land) மாற்றுவது என பல்கலைக்கழக நிர்வாகம் முடிவு செய்தது. இதன் ஒருபகுதியாக, பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர்.நீ.குமார்
தலைமையில் அந்நிலப்பரப்பில் தேக்கு மற்றும், மலைவேம்பு மரக்கன்றுகளை நடும் பணி மேற்கொள்ளப்பட்டது.இதனை துணைவேந்தர் தொடங்கிவைத்தார்.
தொடர்ந்துபல்கலைக்கழக விஞ்ஞானிகள் மற்றும் அலுவலர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட தேக்கு மற்றும் மலைவேம்பு மரக்கன்றுகளை நட்டனர். இதன் மூலம் பயன்படுத்தப்படாமல் இருந்த தரிசு நிலப்பரப்பை சாகுபடி நிலமாக மாற்றும் முயற்சியை முன்னெடுத்துள்ளனர்.
இந்நிகழ்வில் பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் அ.சு. கிருட்டிணமூர்த்தி, பயிர்
இனப்பெருக்கம் மற்றும் மரபியல் மைய இயக்குனர் முனைவர் சே. கீதா, பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மற்றும் அலுவலர்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தபடி கலந்து கொண்டனர்.
மேலும் படிக்க...
நச்சுன்னு உடல் எடையைக் குறைக்கனுமா? உணவில் நெய் சேர்த்துக்கோங்க!