இயற்கையில் கிடைக்கும் அனைத்தும் உடல் நலம் காக்கும் மருத்துவ குணம் நிறைந்தவை தான். அதில் மஞ்சளுக்கு (Turmeric) எப்போதும் தனி இடமுண்டு.மஞ்சளின் மகிமைகள் நிச்சயம் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். உணவுப் பொருளாக, அழகு சாதனப் பொருளாக மட்டுமின்றி, மருத்துவ குணத்தையும் பெற்றுள்ள மஞ்சள் நம் உடலில் இரத்தத்தை சுத்தப்படுத்துவதில் முக்கிய பங்காற்றி வருகிறது.
பிரசித்திப் பெற்ற மஞ்சள் வகைகள்
சேலம் (Salem) மற்றும் ஈரோடு (Erode) வகை மஞ்சள் பயிர்களே இன்றளவும் பிரசித்திப் பெற்ற நாட்டுப் பயிர்கள் ஆகும். மஞ்சள் கிழங்கில் முட்டா மஞ்சள், கஸ்தூரி மஞ்சள் மற்றும் விரலி மஞ்சள் என் மூன்று வகைகள் உண்டு. முகத்தில் பூசுவதற்கு முட்டா மஞ்சளும், மருத்துவப் பயன்பாட்டிற்கு கஸ்தூரி மஞ்சளும், சமையல் பயன்பாட்டிற்கு விரலி மஞ்சளும் பயன்படுகிறது.
மருத்துவப் பயன்கள் (Medicinal Benefits)
-
மஞ்சள் விதையிலுள்ள குர்க்குமின் (Curcumin) என்ற ஒரு இரசாயன நிறமி தான் அதன் மஞ்சள் நிறத்திற்கு முக்கிய காரணமாகும். இந்த இரசாயன நிறமி புற்றுநோய்க் கட்டிகள் வராமல் தடுப்பதில் முக்கிய பங்காற்றி வருகிறது.
-
இரத்தக் குழாய்களில் அடைப்புகள் ஏற்படாமல் தடுத்து வருமுன் காப்பதின் அவசியத்தை நமக்கு எடுத்துக்காட்டுகிறது.
-
பசும்பாலில் மஞ்சள் கலந்து குடிப்பதால், நம் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை (Antioxidants) அதிகரிப்பதோடு, வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை அழித்து உடல் நலத்தையும் பேணிக் காக்கிறது.
-
தண்ணீரில் மஞ்சள் தூளைக் கலந்து விட்டால் அதை விட சிறந்த கிருமி நாசினி (Germ Killer) வேறொன்று இல்லை.
-
மஞ்சள் சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீரில் வாய்க் கொப்பளித்தால் தொண்டைப்புண் விரைவில் ஆறுவதோடு, சளி முறிந்து எளிதில் குணமாகும்.
-
மஞ்சளை அரைத்து தோல் மீது தடவினால் சருமம் புதுப்பொலிவு பெறுவதுடன், வசீகரத்தைத் தரும்.
-
சொரி, சிரங்கால் ஏற்படும் தோல் நிறமாற்றத்திற்கு மஞ்சளை அரைத்துப் பூசினால் எளிதில் குணமடையும்.
-
மஞ்சள் பொடியை உணவில் சேர்த்துச் சாப்பிடும் போது உடலிலுள்ள செல்களுக்கு முழு பாதுகாப்பை அளிக்கிறது.
கொரோனாவைத் தடுப்பதில் மஞ்சளின் பங்கு
கொரோனா வைரஸ் (Corona Virus) பரவி வரும் இக்காலத்தில், வேப்பிலையுடன், மஞ்சளை அரைத்து, தண்ணீரில் கரைத்து வீட்டைச் சுற்றியும், வீட்டின் உள்ளேயும் தெளித்தால் எந்தக் கிருமிகளும் நம்மை நெருங்காது. மஞ்சள் கலந்த வெந்நீரில் குளித்தால் வைரஸ் தாக்குதலில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ளலாம்.
இயற்கையின் படைப்பில் கிடைக்கும் அதிகப் பயன்பாடுகளைக் கொண்டுள்ள மஞ்சளின் மகிமைகளை அறிந்து, நாம் சிறிதளவும் வீணாக்கி விடாமல் பயன்படுத்துவோம். மஞ்சள் தன்னை மண்ணுக்குள் புதைத்து பாதுகாத்து வருவதைப் போல மஞ்சளைப் பயன்படுத்தி நம் உடல் நலம் காப்போம்.
Krishi Jagran
ரா.வ.பாலகிருஷ்ணன்.
மேலும் படிக்க...
நச்சுன்னு உடல் எடையைக் குறைக்கனுமா? உணவில் நெய் சேர்த்துக்கோங்க!
தைராய்டு பிரச்னை வராமல் தடுக்கும் செம்பு பாத்திரம்!
Share your comments