மத்திய அரசின் வேளாண் திருத்த சட்ட நகலை, புதுவை முதல்வர், சட்டப்பேரவையில் கிழித்து எறிந்து தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.
விவசாயிகள் எதிர்ப்பு (Farmers Against)
அண்மையில் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு நிறைவேற்ற 3 வேளாண் திருத்தச் சட்டங்களை பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநில விவசாயிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.
போராடும் விவசாயிகள் (Struggling farmers)
இவற்றைத் திரும்பப் பெறக் கோரி, கடந்த 50 நாட்களுக்கும் மேலாக டெல்லியில் உள்ள எல்லைகளில் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனை முடிவுக்குக் கொண்டுவர ஏதுவாக விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடன் மத்திய அரசு நடத்திய பேச்சு வார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படவில்லை.
இதனால், போராட்டம் தொடர்கிறது. மத்திய அரசின் இந்த வேளாண்திருத்தச் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்கள் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் புதுச்சேரி சட்டப்பேரவை கூடியது. இதில்,மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று வேளாண் துறை அமைச்சர் கமலக்கண்ணன் தீர் மானம் கொண்டு வந்து பேசினார்.
அப்போது, மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்கள் கூட்டாட்சி தத்துவத் துக்கு எதிரானது. மாநில அரசின் பட்டியலில் இருந்து வேளாண் சந்தை நீக்கப்படுவதால் மானியங்கள் தர முடியாத சூழல் ஏற்படும் என்றும், விவசாயம், கார்ப்பரேட் நிறுவனங் களின் ஆதிக்கத்தின்கீழ் வந்து விடும் ஆபத்து உள்ளது எனவும் குறிப்பிட்டார்.
முதல்வர் கண்டனம் (Chief condemned)
அதைத் தொடர்ந்து முதல்வர் நாராயணசாமி பேசியதாவது:
வேளாண் சட்டங்களுக்கு எதி ராக கடந்த 54 நாட்களாக டெல்லி எல்லையில் விவசாயிகள் போராடுகின்றனர். இச்சட்டத்தால் விவசாயி கள், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கூலி வேலை ஆட்களாகத்தான் செல்ல முடியும்.
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு நிலங்களை தந்து கொள்ளை லாபம் அடிக்கவே இச்சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. பஞ்சாப், ஹரியாணா மாநில விவசாயிகள் போராட்டத்தால் ரூ.35 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
கார்ப்பரேட் கம்பெனிகளிடம் விவசாயம் சென்று விட்டால் அவர்கள் நிர்ணயிக்கும் விலையில் தான் உணவுப் பொருட்கள் கிடைக்கும். தனியார் நிறுவனங்கள் கொள்ளை லாபம் அடிக்க கொண்டு வரப்பட்டுள்ள, விவசாயிகளுக்கு உதவாத வேளாண் சட்ட நகலை சட்டப்பேரவையில் கிழிக்கிறேன்.
இவ்வாறு முதல்வர் பேசினார்.
சட்டநகல் கிழிப்பு (Fragment tear)
பின்னர் மத்திய அரசின் வேளாண் சட்ட நகலை கிழித்து எறிந்த முதல்வர் நாராயணசாமி, விரோதமான சட்டத்தை எதிர்ப்பதே முதல் கடமை. முதல்வர் என்றாலும், விவசாயத்தைக் காக்க வேண்டிய குடிமகன் என்ற அடிப்படையில் சட்ட நகலை பேரவை யில் கிழித்து எறிந்தேன் என்று தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து, வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண் டும் என அமைச்சர் கமலக்கண்ணன் கொண்டு வந்த தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
மேலும் படிக்க....
2024ம் ஆண்டு வரை போராடத் தயார் : விவசாய சங்கத்தினர் அறிவிப்பு!
மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம் - சிறப்பு முகாமில் பங்குபெற விவசாயிகளுக்கு அழைப்பு!
ஆரோக்கியத்தைப் பெற வேண்டுமா? பாரம்பரிய உணவுகளுக்குத் திரும்புங்கள்!