1. விவசாய தகவல்கள்

மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம் - சிறப்பு முகாமில் பங்குபெற விவசாயிகளுக்கு அழைப்பு!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Relief for rain-damaged crops - Invitation to farmers to participate in special camp!
Credit : Dailyhunt

விருதுநகர் மாவட்டத்தில் மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு ஏதுவாக சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

இதில் விவசாயிகள் தங்கள் ஆவணங்களுடன் வந்து, கிராம நிர்வாக அலுவலர்களைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இதுதொடர்பாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் இரா.கண்ணன் செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது :

விரைவில் நிவாரணம் (Relief soon)

விருதுநகர் மாவட்டத்தில் விளைநிலங்களில் பயிரிடப்பட்ட பயிர்கள் தொடர் மழையினால் சேதமடைந்ததாக வரப்பெற்ற செய்திகளின்படி, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விரைவாக நிவாரணத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அரசு உத்தரவு (Government order)

இதற்காக கணக்கெடுப்புப் பணியை அந்தந்த பகுதி கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வேளாண்மைத்துறை அலுவலர்கள் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சிறப்பு முகாம்கள் (Special Camps)

எனவே இப்பணியினை விரைவாகவும் எவ்வித புகாருமின்றியும் கிராம நிர்வாக அலுவலர்கள் செய்ய ஏதுவாக விருதுநகர் மாவட்டத்தில் நேற்று சிறப்பு முகாம் தொடங்கியுள்ளது. இந்த முகாம்கள் 20.01.2021 தேதி வரை அந்தந்த பகுதி கிராம நிர்வாக அலுவலகங்களில் நடைபெறுகிறது.

மேற்கண்ட முகாம் நாட்களில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கீழ்க்கண்ட ஆவணங்களின் நகல்களுடன் கிராம நிர்வாக அலுவலர்களை தொடர்பு கொள்ள வேண்டும்.

ஆவணங்கள் (Documents)

  • பட்டா நகல்

  • அடங்கல் நகல்

  • (ஏற்கனவே கிராம நிர்வாக அலுவலரிடம் பெறப்பட்டிருந்தால் மட்டும்) 

  • பட்டாதாரர் ஆதார் நகல்

  • குடும்ப அட்டை நகல்

  • பட்டாதாரர் பெயரில் உள்ள வங்கி கணக்கு புத்தக நகல்

  • இந்த ஆணவங்களை கிராம நிர்வாக அலுவலரிடம் சமர்ப்பித்து சேத விபரங்களை தெரிவிக்குமாறு பாதிக்கப்பட்ட விவசாயிகள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.


 மேலும் படிக்க....

2024ம் ஆண்டு வரை போராடத் தயார் : விவசாய சங்கத்தினர் அறிவிப்பு!

குளிர்கால நோய்களில் இருந்துத் தப்பிக்க வேண்டுமா? இது மட்டும் போதும்!

சூரிய ஒளி மின்வேலி திட்டம்- மானியம் பெறுவது எப்படி?

English Summary: Relief for rain-damaged crops - Invitation to farmers to participate in special camp! Published on: 19 January 2021, 09:08 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.