
இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், இதுவரை இல்லாத அளவிற்கு புதிய உச்சமாக ஓரே நாளில் 1.31 லட்சம் பேருக்கு நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு - Corona 2-nd Wave
இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா தொற்று தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பல்வேறு கட்ட நடவடிக்கையின் காரணமாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மெல்ல மெல்ல குறைய தொடங்கியதை, இதைத்தொடர்ந்து கொரோனா காரணமாக விதிக்கப்பட்ட பொது முடக்கம் பல்வேறு நிலைகளாகத் தளர்த்தப்பட்டு வந்தன.
ஒரே நாளில் 1. 31 லட்சம் பேர் பாதிப்பு - India records its Highest
இந்நிலையில், தற்போது மீண்டும் இந்தியாவில் கொரோவின் பாதிப்பின் 2-வது அலை வீசத் தொடங்கியுள்ளது. இதனால் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் புதிய உச்சமாகக் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1 லட்சத்து 31 ஆயிரத்து 968 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை வெளியிட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 780- பேர் உயிரிழந்துள்ளனர். 61 ஆயிரத்து 899 பேர் குணமடைந்துள்ளனர்.
மொத்த பாதிப்பு எண்ணிக்கை
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளானோர் எண்ணிக்கை 1 கோடியே 30 லட்சத்து 60 ஆயிரத்து 542 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவில் இருந்து இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1 கோடியே 19 லட்சத்து 13 ஆயிரத்து 292 ஆக உள்ளது. தொற்று பாதிப்புடன் 9 லட்சத்து 79 ஆயிரத்து 608- பேர் நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.கொரோனாவுக்கு இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 67 ஆயிரத்து 642- ஆக உள்ளது.
தடுப்பூசி
இந்நிலையில், நாட்டில் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் எண்ணிக்கை 9 கோடியே 43 லட்சத்து 34 ஆயிரத்து 262 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் இன்று காலை நிலவரப்படி உலகலவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 கோடியே 45 லட்சத்து 28 ஆயிரத்து 282 பேராக அதிகரித்துள்ளது.
மேலும் படிக்க....
கொரோனா 2-வது அலை : மீண்டும் சாவலான நிலை - பிரதமர் மோடி கவலை!!!