1. செய்திகள்

கொரோனா 2வது அலை : தமிழகத்தில் மீண்டும் கட்டுப்படுத்தப்பட்ட பொது முடக்கம் அறிவிப்பு!

Daisy Rose Mary
Daisy Rose Mary

தமிழ்நாட்டில் மீ்ண்டும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் நோய் தொற்றை கட்டுப்படுத்த வரும் 10-ஆம் தேதி முதல் கட்டுப்படுத்தப்பட்ட பொது முடக்கத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி, திருவிழா, மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கீழ்கண்ட அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது, 

  • இந்தியா முழுவதும் கொரோனா 2வது அலை மீண்டும் வேகமெடுத்துள்ளது. மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்றை கட்டுப்படுத்த கீழ்கண்ட அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

  • மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களை தவிர சர்வதேச விமானப் போக்குவரத்திற்கான தடை மத்திய அரசால் நீட்டிக்கப்பட்டுள்ளதால் இதற்கான தடை தொடரும்.

  • தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின் படி எந்தவித தடங்கலுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும்.

  • நோய் பரவலை கருத்தில்கொண்டு திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு ஏப்ரல் 10 முதல் தடை விதிக்கப்படுகிறது.

  • ஏப்ரல் 10 முதல் கோயம்பேடு வணிக வளாகத்தில் செயல்படும் சில்லறை வியாபார காய்கறி அங்காடிகள் மட்டும் செயல்பட தடை விதிக்கப்படுகிறது.

  • தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள், தனியார் நிறுவனங்கள், அலுவலகங்கள், மற்றும் உணவு விடுதிகளில் பணிபுரியும் பணியாளர்கள், அலுவலர்கள், மற்றும் பொதுமக்களின் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படுவதையும், கை சுத்திகரிப்பான் உபயோகப்படுத்துவது, முகக்கவசம் அணிவதையும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் உறுதி செய்து அனுமதிக்க வேண்டும். முகக் கவசங்கள் அணியாமல் இருப்பவர்களை கட்டாயமாக அனுமதிக்க கூடாது.

 

  • ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையான வழிகாட்டு நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்றி தொழிற்சாலைகள் இயங்க அனுமதிக்கப்படும். தொழிற்சாலைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு மத்திய அரசு அவ்வப்போது வழங்கும் அறிவுரைகளுக்கு ஏற்ப தடுப்புசி போடுவதற்கான ஏற்பாடுகளை தொழிற்சாலை நிர்வாகம் செய்ய வேண்டும். மேலும் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை முறையாக பின்பற்றாத தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

  • நிலையான வழிகாட்டு நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்றி மாவட்டங்களுக்கு இடையேயான அரசு பொது மற்றும் தனியார் பேருந்து மற்றும் பெருநகர சென்னையில் இயக்கப்படும் மாநகரப் பேருந்துகளில் உள்ள இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும். பேருந்துகளில் நின்றுகொண்டு பயணம் செய்ய அனுமதி இல்லை

  • முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது, உள்ளிட்ட நிலையான வழிகாட்டு நடைமுறைகளை கட்டாயம் பின்பற்றி காய்கறி கடைகள், பலசரக்கு கடைகள் உட்பட அனைத்து கடைகளும் வணிக வளாகங்கள், அனைத்தும் ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் ஒரு நேரத்தில் 50 விழுக்காடு வாடிக்கையாளர்களுடன் மட்டும் இரவு 11 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

  • நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் உள்ள மொத்த இருக்கைகளில் 50 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் இரவு 11 மணி வரை அமர்ந்து உணவருந்த அனுமதிக்கப்படும் மேலும் உணவகங்களில் இரவு 11 மணி பார்சல் சேவை அனுமதிக்கப்படும் கேளிக்கை விடுதிகளில் 50 விழுக்காடு வாடிக்கையாளருடன் செயல்பட அனுமதிக்கப்படும்

  • பொழுதுபோக்கு பூங்காக்கள், பெரிய அரங்குகள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், போன்ற பொதுமக்கள் கூடும் இடங்கள் 50 விழுக்காடு வாடிக்கையாளருடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

  • நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஒன்றுக்கு மேற்பட்ட திரையரங்குகள் உள்ள திரையரங்கு வளாகங்கள், வணிக வளாகத்தில் உள்ள திரையரங்குகள், உட்பட அனைத்து திரையரங்குகளும் 50 விழுக்காடு இருக்கைகளை மட்டும் பயன்படுத்தி செயல்பட அனுமதிக்கப்படும்.

  • நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி அரங்கங்களில் மட்டும் அதிகபட்சமாக 200 நபர்கள் மட்டும் பங்கேற்கும் வண்ணம் சமுதாயம், அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகள் மற்றும் விழாக்கள் அனுமதிக்கப்படும்.

    திருமண நிகழ்வுகளில் 100 நபர்களுக்கு மிகாமலும் இறுதி ஊர்வலங்களில் 50 நபர்களுக்கு மிகாமலும் கலந்து கொள்ள அனுமதிக்கப் படும்.

    விளையாட்டு அரங்கங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் பார்வையாளர்கள் அனுமதியின்றி விளையாட்டு போட்டிகள் நடைபெற அனுமதிக்கப்படும். 

  • நீச்சல் குளங்கள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி விளையாட்டு பயிற்சிகளுக்கு மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.

  • பொருட்காட்சி அரங்கங்கள் வர்த்தகத்துக்கு இடையேயான செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதியளிக்கப்படும்.

  • அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் வழிபாடு இரவு 8 மணி வரை அனுமதிக்கப்படும் இருப்பினும் மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை.

  • சின்னத்திரை மற்றும் திரைப்பட தொழிலுக்கான படப்பிடிப்புகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும். இருப்பினும் படப்பிடிப்பில் கலந்துகொள்ளும் சின்னத்திரை திரைப்பட கலைஞர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டு படப்பிடிப்பில் கலந்து கொள்வதை சின்னத்திரை மற்றும் திரைப்பட படப்பிடிப்பு நிர்வாகங்கள் செய்ய வேண்டும்.

  • வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்களில் ஓட்டுநர் தவிர்த்து மூன்று பயணிகள் மட்டுமே பயணிக்க ஏற்கனவே 1.7 2020 முதல் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த கட்டுப்பாடு கண்டிப்பாக அமல்படுத்தப்படும்.

  • ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர்த்து இரண்டு பயணிகள் மட்டும் பயணிக்க ஏற்கனவே 1.7 .2020 முதல் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த கட்டுப்பாடு கண்டிப்பாக அமல்படுத்தப்படும்.

  • வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் நபர்களை தொடர்ந்து கண்காணிக்கும் முறை தொடர்ந்து செயல்படுத்தப்படும். ”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இ-பாஸ் முறை கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.

English Summary: Covid 2nd wave: Tamilnadu government announced next set of lockdown Guidelines from april 10 Published on: 08 April 2021, 03:06 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.