மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா 3ம் அலை தொடங்கிவிட்டதால், மக்கள் கூடுதல் விழிப்புடன் இருக்குமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
தொற்று அதிகரிப்பு (Increase in infection)
கொரோனா வைரஸ் பரவல், கேரளாவில் தற்போது மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. இதையடுத்து இரவுநேர ஊரடங்கு உள்ளிட்டக் கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. இதன்மூலம் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
படிப்படியாக அதிகரிப்பு (Gradual increase)
மகாராஷ்டிராவில் கொரோனா தினசரி பாதிப்பு சுமார் 4 ஆயிரம் முதல் 5 ஆயிரமாக அதிகரித்துள்ளது. கொரோனா கட்டுக்குள் வந்து விடும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், கடந்த சில நாட்களாக பொதுமக்களுக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் பாதிப்பு சதவீதம் மெல்ல மெல்ல அதிகரித்து வருவதுக் கண்டறியப்பட்டிருப்பதாக, அரசு தெரிவித்தது.
தலைநகர் மும்பையில் 300-க்கும் கீழ் இருந்த தினசரி பாதிப்பு , தற்போது 400-ஐ தாண்டியுள்ளது. இதனால் 3-வது அலை அச்சம் ஏற்பட்டது.
விநாயகர் சதுர்த்தி தடை? (Ganesha Chaturthi banned?)
ஆனால் மும்பையில் கொரோனா 3-வது அலை ஏற்கனவே தொடங்கி விட்டதாக மேயர் கிஷோரி பெட்னேகர் அறிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், மும்பையில் கொரோனா 3-வது அலை வந்து விட்டதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கொரோனாத் தடுப்பு விதிகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். விநாயகர் சதுர்த்தியை பொதுமக்கள் வீட்டிலேயே கொண்டாட வேண்டும்" என்றார்.
மகாராஷ்டிராவின் 2-வது தலைநகராக கருதப்படும் நாக்பூரிலும் கொரோனா 3-வது அலை தொடங்கி விட்டதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
தளர்வுகள் (Relaxations)
எனினும், நாக்பூரில் நடைமுறையில் இருக்கும் தளர்வுகளைக் குறைத்து இன்னும் 3 நாட்களில் அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.
இதன் மூலம் முதல் 2 அலைகளில் நாட்டிலேயே அதிக பாதிப்பைச் சந்தித்த மகாராஷ்டிராவில் கொரோனா 3-வது அலை தொடங்கி உள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
அச்சச்சோ மீண்டும் கட்டுப்பாடுகளா? கொரோனாவை விரட்ட புதியத் திட்டம்!
கல்லூரி மாணவர்களுக்கு ஒரே மாதத்தில் 2 கொரோனா தடுப்பூசி?