News

Tuesday, 25 January 2022 10:22 AM , by: Elavarse Sivakumar

உலக நாடுகள் விரிவான நடவடிக்கை எடுத்தால் கொரோனாவுக்கு இந்த ஆண்டே முடிவு கட்டிவிடலாம் என்று உலக சுகாதார அமைப்பு தலைவர் கூறியுள்ளார்.குறிப்பாக ஏப்ரல் மாதத்திற்குள் முற்றுப்புள்ளி வைத்துவிட முடியும் என நிபுணர்களும் தெரிவித்துள்ளனர்.

கொரோனா ஆதிக்கம் (Corona dominance)

2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், உலக நாடுகளில் கொஞ்சம் கொஞ்சமாகப் பரவத் தொடங்கியது. அதன்பிறகு இந்தியா உள்பட உலக நாடுகள் முழுவதும் பரவியது. 2 ஆண்டுகளுக்கு மேலாக கொரோனாவின் ஆதிக்கம் நீடித்து வருகிறது.

டெல்டா, ஆல்பா, பீட்டா, காமா என்று உருமாறிய கொரோனா, ஒமைக்ரான் வைரசாகவும் உருமாறி உள்ளது. டெல்டாவை விட வேகமாக பரவக்கூடியது என்பதால், ஒமைக்ரான் தொற்றால் உலகம் முழுவதும் 3-வது அலை படுவேகமாக வீசி வருகிறது.

ஒமைக்ரான் வைரஸ்

இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று, சமூக பரவலாக மாறிவிட்டதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரித்து வருவதால், ஏப்ரல் மாதத்துக்குள் கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விடும் என்று மருத்துவ நிபுணர்கள் கணித்துள்ளனர்.

WHO

இதுபோல், உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குனர் டெட்ராஸ் அதனம் கெப்ரிசியசும் இந்த ஆண்டுடன் கொரோனா முடிவுக்கு வந்து விடும் என்று கூறியுள்ளார்.

ஆதரவு (Support)

உலக சுகாதார அமைப்பின் செயற்குழுவின் 150-வது அமர்வு நடைபெற்றது. அதில், டெட்ராஸ் அதனம் கெப்ரிசியஸ் பேசியதாவது:-

கொரோனாவை ஒழித்து கட்டுவதில் பிராந்திய, தேசிய, சர்வதேச ரீதியாக உலக சுகாதார அமைப்பு தொடர்ந்து பணியாற்றி வருகிறது. நாடுகளுக்கு தேவையான ஆதாரங்கள், வியூகங்கள் மற்றும் தொழில்நுட்ப உதவி அளித்து வருகிறது.

வியூகங்கள் (Strategies)

நாடுகள் இந்த வியூகங்களைப் பயன்படுத்தி, விரிவான நடவடிக்கை எடுத்தால், நாம் இந்த ஆண்டிலேயே கொரோனாவுக்கு முடிவு கட்டலாம்.

கொரோனாவில் இருந்துப் பாடம் கற்றுக்கொண்டு, இதுபோன்ற நெருக்கடிகளைத் தடுக்க புதிய தீர்வுகளை உருவாக்க வேண்டுமேத் தவிர, இனியும் தொற்று முடியும்வரை காத்திருக்கக்கூடாது. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

மேலும் படிக்க...

ஒமிக்ரானால் ரத்து செய்யப்பட்டத் திருமணம் - நியூசிலாந்து பிரதமருக்கு வந்த சோதனை!

கொரோனா 3வது அலை எப்போது Endcard போடும்? நிபுணர்கள் விளக்கம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)