மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 10 January, 2022 7:54 AM IST
Credit : Dinamalar

கொரோனாப் பரவலைக் கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்த போதிலும், தமிழகத்தில் தினசரி கொரோனா வைரஸ் பாதிப்பு 10,978 இல் இருந்து 12,895 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாப் பரவல் (Corona spread)

கொரோனா வைரஸ் தொற்றுப்பரவலைக் கட்டுப்படுத்த ஏதுவாக, இரவு ஊரடங்கு, ஞாயிறு ஊரடங்கு என பல நடவடிக்கைகளை அரசு அறிவித்துள்ளது. இருப்பினும் தொற்றுப்பரவல் கட்டுக்குள் வந்தபாடில்லை.

இதனிடையே தமிழகத்தில் ஜனவரி 9ம் தேதி கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

12,895

தமிழகத்தில் 1,48,308 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 12,895 ஆக உள்ளது.

6,186

இதில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களில் 12,843 பேர், வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 52 பேர் என மொத்தம்12,895 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மேலும் 6,186 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

12 பேர் பலி (12 killed)

கொரோனாவால் மேலும் 12 பேர் இறந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 36,855 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 51,355 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இருந்து மேலும் 1,808 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 27,12,096 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்ட 185 பேரும் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

மாவட்ட வாரியாக  (District wise)

செங்கல்பட்டில் 1,332 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 1,512 ஆக அதிகரித்துள்ளது. திருவள்ளூரில் 591 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 702 ஆக உயர்ந்துள்ளது.

கோவையில் 585 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 608 ஆக அதிகரித்துள்ளது. காஞ்சிபுரத்தில் 309 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 343 ஆக உயர்ந்துள்ளது.

மதுரையில் 314 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 348 ஆக அதிகரித்துள்ளது.வேலூரில் 243 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 295 ஆக உயர்ந்துள்ளது.


புள்ளிவிபரம் (Statistics)

திருச்சியில் 237 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 275 ஆக அதிகரித்துள்ளது. திருப்பூரில் 226 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 219 ஆக குறைந்துள்ளது.

கிருஷ்ணகிரி - 103, மதுரை - 348, நாகை - 48, நாமக்கல் - 87, நீலகிரி - 23, பெரம்பலூர் - 50, புதுக்கோட்டை - 20, ராமநாதபுரம் - 58 பேருக்கு பாதிப்பு. ராணிப்பேட்டை - 184, சேலம் - 146, சிவகங்கை - 70, தென்காசி - 38, தஞ்சை - 118, தேனி - 58 பேருக்கு கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

முழு ஊரடங்கு அமல்- சென்னையில் பஸ், ஆட்டோ, மெட்ரோ ரயில்கள் ஓடாது!

ஒமிக்ரான் வேகமாக குறையும்: அமெரிக்க அறிவியலாளர் நம்பிக்கை!

English Summary: Corona impact in Tamil Nadu is close to 13 thousand!
Published on: 09 January 2022, 10:12 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now