1. செய்திகள்

முழு ஊரடங்கால் வெறிச்சோடிய சாலைகள்- முடங்கிய மக்கள்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Roads that are completely deserted and paralyzed
Credit: Maalaimalar

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ஞாயிறு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாநிலம் முழுவதும் முக்கிய சாலைகள் அனைத்தும் வெறிச்சோடின.

கொடூரக் கொரோனா (Cruel corona)

அடித்தாக்கும் கொரோனா பாதிப்பு, அச்சத்தின் பிடியில் அரசு இயந்திரம் என மாநிலமே கொரோனா வைரஸ் பரவலைக் கண்டு வாயடைத்து நிற்கிறது. கடந்த 2 ஆண்டுகளாகப் பாடாய் படுத்திவந்த கொரோனரோ வைரஸ், தற்போது 3-வது அலையாக உருவெடுத்து, கூடுதல் வேகத்துடன் ஒய்யாரமாக வலம் வந்துகொண்டிருக்கிறது.

இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு முழுஊரடங்கு, தீவிரக் கண்காணிப்பு என அதிரடி நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது அரசு.

தடை (Prohibition)

  • இதன்படி முழுஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் வீட்டைவிட்டு வெளியேச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

  • இதனால் ஆட்கள் நடமாட்டம் இன்றி வீதிகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.

  • பேருந்து, ஆட்டோ, மெட்ரோ ரயில் சேவைகள் இல்லை.

அனுமதி (Permission

  • அத்தியாவசியப் பணிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது.

  • பால் விநியோகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

  • உணவு நிறுவனங்கள் ஆட்கள் மூலம் உணவு விநியோகம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

  •  திருமணங்களுக்கு செல்வோர் திருமண பத்திரிகையை காண்பித்து பயணிக்க முடியும்.

  • உணவு டெலிவரி நிறுவனங்களின் சேவை, மற்றும் ஓட்டல்களில் பார்சல் சேவைக்கு அனுமதி உண்டு.

சந்தை மூடல் (Market closure)

கோயம்பேடு மொத்த காய்கறி சந்தையின் அனைத்து நுழைவு வாயில்களும் மூடப்பட்டுள்ளன. முழு ஊரடங்கு காரணமாக சென்னை, திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களின் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பு மேற் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு அந்த பகுதி முழுவதும் சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றது.

16,000 போலீசார் (16,000 police)

சென்னை முழுவதும் 16 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 372 இடங்களில் காவல் தடுப்புகள் அமைத்து வாகன சோதனைகள் நடைபெறுகின்றன. தேவையின்றி வரும் வாகனங்களில் வருவோர் நிறுத்தப்பட்டு அபராதம் வசூலிக்கப்படுகிறது.

தாம்பரத்தில் 72 இடங்களில் வாகன சோதனை நடைபெற்று வருகிறது. 1200 போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆவடியில் 109 இடங்களில் வாகன தணிக்கை நடைபெறுகிறது. 1750 போலீசார் பாதுபாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ரோந்து வாகனங்கள் மூலம், போலீசார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க...

முழு ஊரடங்கு அமல்- சென்னையில் பஸ், ஆட்டோ, மெட்ரோ ரயில்கள் ஓடாது!

ஒமிக்ரான் வேகமாக குறையும்: அமெரிக்க அறிவியலாளர் நம்பிக்கை!

English Summary: Roads that are completely deserted and paralyzed Published on: 09 January 2022, 10:24 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.