கோவேக்சின் (Co-Vaccine) மருந்தை தயாரித்துள்ள பாரத் பயோ டெக் நிறுவனம் குழந்தைகளுக்கான தடுப்பூசி பரிசோதனையை இந்த மாதம் இறுதியில் செய்யப்போவதாக அறிவித்துள்ளது.
2 நிறுவனங்கள் (2 Companies)
இந்தியாவில் தற்போது கோவிஷீல்டு, கோவேக்சின் (Co-Vaccine, Co-shield) ஆகிய கொரோனா தடுப்பூசி மருந்துகள் பயன்பாட்டில் உள்ளன. இந்த தடுப்பூசிகள் முதல்கட்டமாக சுகாதார ஊழியர்களுக்கு போடப்பட்டு வருகிறது.
பரிசோதனை (Testing)
2 கொரோனா தடுப்பூசி மருந்து பரிசோதனை இந்தியாவில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. சில மருந்துகளின் பரிசோதனை நடந்து வருகிறது. ஆனால் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே இந்த மருந்தை பயன்படுத்துவதற்காக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
எனவே 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தற்போது கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.குழந்தைகளுக்கு பயன்படுத்துவது தொடர்பாக இதுவரை பரிசோதனை நடைபெறாததால் அவற்றை பயன்படுத்தவில்லை.
அனுமதி (Permission)
இந்த நிலையில் முதலாவதாக கோவேக்சின் மருந்தை தயாரித்துள்ள பாரத் பயோ டெக் (Bharat Bio-Tech) நிறுவனம் குழந்தைகளுக்கான மருந்தை பரிசோதனை செய்யப்போவதாக அறிவித்துள்ளது. இதற்கான அனுமதியையும் மத்திய அரசிடம் கேட்டுள்ளது.
3 பிரிவுகளில் பரிசோதனை (Test in 3 Divisions)
-
இதன்படி 2 வயதில் இருந்து 18 வயது வரை உள்ளவர்களிடம் பரிசோதனை செய்யப்படுகிறது. அதாவது வயதின் அடிப்படையில் 3 பிரிவுகளில் பரிசோதனை நடத்த உள்ளனர்.
-
இதன்படி 2 வயதில் இருந்து 5 வயது வரை, 6 வயதில் இருந்து 12 வயது வரை, 12 வயதில் இருந்து 18 வயது வரை என 3 பிரிவுகளில் நடைபெறும்.
-
இந்த பரிசோதனை பணிகள் இந்த மாதம் இறுதியில் அல்லது அடுத்த மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் என்று பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக பாரத் பயோடெக் நிறுவன பரிசோதனை குழு ஒருங்கிணைப்பாளர் அசிஸ் தஜ்னே கூறியதாவது:-
உலகிலேயே குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி பரிசோதனையை நாங்கள் தான் முதன் முதலாக நடத்துகிறோம்.
ஏற்கனவே எங்கள் மருந்தை சோதனை நடத்திய இடங்களிலேயே இந்த சோதனையும் நடைபெறும். குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் இந்த பரிசோதனையை நடத்த இருக்கிறோம். இதற்காக ஆஸ்பத்திரிகளின் அனுமதியை பெற்று வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் படிக்க...
கீரையில் வெட்டுக்கிளி மற்றும் பூச்சி கட்டுப்பாடு!
விறுவிறுப்பாக வியாபாரம் ஆகும் விதைப்பந்து - அதிக லாபம் தரும் சூப்பர் பிஸ்னஸ்!
கால்நடை விவசாயிகளுக்கு ரூ.10,000 வரை அபராதம் - மக்களே ஊஷார்!