News

Thursday, 17 March 2022 04:47 PM , by: Elavarse Sivakumar

கள்ளநோட்டுகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதாக அரசு தரப்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே 2016ம் ஆண்டைப் போல, விரைவில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்படுமோ என்ற அச்சம் மக்களிடையேப் பரவி வருகிறது.

இந்தியாவில் புழக்கத்தில் உள்ள கள்ளநோட்டுகளின் எண்ணிக்கை 197 மடங்கு உயர்ந்திருப்பதாக மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து மாநிலங்களவையில் அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, 2016ஆம் ஆண்டில் இருந்து இந்தியாவில் புழக்கத்தில் உள்ள 500 ரூபாய் கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை 197 மடங்கு உயர்ந்துள்ளது.அரசு வெளியிட்டுள்ள தகவல்படி, 2016-17ஆம் ஆண்டில் இந்தியாவில் புழக்கத்தில் இருந்த 500 ரூபாய் கள்ளநோட்டுகளின் எண்ணிக்கை 199 ஆகும்.

2020-21ஆம் ஆண்டில் புழக்கத்தில் உள்ள 500 ரூபாய் கள்ளநோட்டுகளின் எண்ணிக்கை 39,453ஆக உயர்ந்துள்ளது. இதேபோல், 2000 ரூபாய் கள்ளநோட்டுகளின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. அரசு தகவல்படி, 2000 ரூபாய் கள்ளநோட்டுகளின் எண்ணிக்கை 638இல் இருந்து 8,798ஆக உயர்ந்துள்ளது. 50 ரூபாய் கள்ளநோட்டுகளின் எண்ணிக்கை 9,222இல் இருந்து 24,802ஆக உயர்ந்துள்ளது.

குறைந்தது

எனினும் 10 ரூபாய், 20 ரூபாய், 100 ரூபாய் கள்ளநோட்டுகளின் புழக்கம் குறைந்துள்ளது. 2020ஆம் ஆண்டில் 8,30,000 கள்ளநோட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பட்ஜெட் கூட்டத்தொடரின்போது நாடாளுமன்றத்தில் அரசு தெரிவித்தது.

கள்ளநோட்டுகளின் புழக்கம் கடுமையாக உயர்ந்துள்ளது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. ஏனெனில், கள்ளநோட்டுகள் புழக்கம் மற்றும் கறுப்புப் பணம் அதிகரிப்பைக் காரணம் காட்டி, கடந்த 2016ஆம் ஆண்டில் 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பு நீக்கம் (Demonetisation) செய்யப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார்.

பின்னர் புதிய 500 ரூபாய், 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. எனினும், இத்தனை ஆண்டுகளாக கள்ளநோட்டுகள் தொடர்ந்து அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது. எனவே விரைவில், பண மதிப்பிழப்பு நடவடிக்கை அமல்படுத்தப்படுமோ? என்ற அச்சம் மக்களிடையே பரவி வருகிறது.

மேலும் படிக்க...

கொரோனாவால் அதிகரித்த ஆண்மைக் குறைபாடு பிரச்னை - ஆய்வில் தகவல்!

வெள்ளரிக்காய் சாப்பிட்டால், இத்தனைப் பக்கவிளைவுகள்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)