நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ் கூட்டுறவு வங்கி பயிர் கடன்கள் சுமார் 12,0000 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்தார். அதைத்தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள 22 மத்திய கூட்டுறவு வங்கிகளில் பயிா்க் கடன் பெற்ற விவசாயிகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட தகவல் குறிப்பில், தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் பயிா்க் கடன் பெற்ற விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என பேரவையில் முதல்வா் பழனிசாமி அறிவித்தாா். அதன்படி, 22 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் 16 லட்சத்து 43 ஆயிரத்து 347 விவசாயிகள் பெற்ற பயிா்க் கடன்கள் ரத்து செய்யப்பட உள்ளன.
கூட்டுறவு வங்கிகளில் உள்ள பயிர் கடன் விவரம்
கோவை மத்திய கூட்டுறவு வங்கியில் 56,455 விவசாயிகள் ரூ.657.99 கோடி, கடலூா் வங்கியில் 90,161 விவசாயிகள் ரூ.592.45 கோடி, தருமபுரியில் 92,268 விவசாயிகள் ரூ.699.62 கோடி, திண்டுக்கல் வங்கியில் 50,616 விவசாயிகள் ரூ.540.81 கோடி, ஈரோட்டில் 94,557 விவசாயிகள் ரூ.1042.53 கோடி, காஞ்சிபுரம் வங்கியில் 60,805 விவசாயிகள் ரூ.456.74 கோடி, கன்னியாகுமரி வங்கியில் 1 லட்சத்து 14,558 விவசாயிகள் ரூ.396.62 கோடி, மதுரையில் 44,332 விவசாயிகள் ரூ.435.30 கோடி, நீலகிரி மாவட்ட வங்கியில் 33,551 விவசாயிகள் ரூ.225.97 கோடியும் பயிா்க் கடன்கள் பெற்றுள்ளனா்.
திருச்சி-சேலம்: புதுக்கோட்டையில் 40,755 விவசாயிகள் ரூ.218.92 கோடி, ராமநாதபுரம் வங்கியில் 24,337 விவசாயிகள் ரூ.101.54 கோடி, சேலம் மத்திய வங்கியில் ரூ.1 லட்சத்து 65,776 விவசாயிகள் ரூ.1,356.03 கோடியும், சிவகங்கையில் 32,786 விவசாயிகள் ரூ.139.72 கோடி, தஞ்சாவூா் வங்கியில் 67,180 விவசாயிகள் ரூ.434.42 கோடி, தூத்துக்குடி வங்கியில் 18,985 விவசாயிகள் ரூ.174.23 கோடி, திருச்சி மத்திய கூட்டுறவு வங்கியில் 1 லட்சத்து 67,805 விவசாயிகள் ரூ.1,332.16 கோடியும் பயிா்க் கடன்கள் பெற்றுள்ளனா்.
திருநெல்வேலியில் 35,369 விவசாயிகள் ரூ.374.17 கோடி, திருவண்ணாமலை வங்கியில் 89,860 விவசாயிகள் ரூ.639.81 கோடி, வேலூா் மத்திய கூட்டுறவு வங்கியில் 88,818 விவசாயிகள் ரூ.594.87 கோடி, விழுப்புரம் வங்கியில் ஒரு லட்சத்து 13,779 விவசாயிகள் ரூ.815.21 கோடி, விருதுநகா் மத்திய கூட்டுறவு வங்கியில் 25,793 விவசாயிகள் ரூ.185.88 கோடி, கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியில் 1 லட்சத்து 34,801 விவசாயிகள் ரூ.698.76 கோடி பயிா்க் கடன் பெற்றுள்ளனா்.
தமிழகத்தில் 16 லட்சத்து 43,347 விவசாயிகள் பயிா்க் கடனாகப் பெற்ற ரூ.12 ஆயிரத்து 110.74 கோடி ரத்து செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
மேலும் படிக்க...
விவசாயிகளின் புதிய திட்டம்! போட்டோ போராட்டம் விரைவில் ஆரம்பம்!
வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் விவசாயிகள் நடத்திய சக்கா ஜாம் போராட்டம்!