மழையால் பயிர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறித்த கணக்கெடுப்பை, வேளாண் துறையினர் துவக்கி உள்ளனர்.
சம்பா பருவ நெல் சாகுபடி
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், சம்பா பருவ நெல் சாகுபடி (Samba Season Paddy Crops) நடந்து வருகிறது. இப்பருவத்தில், 12 லட்சம் ஏக்கரில் சாகுபடி மேற்கொள்ள வாய்ப்புள்ளது. இதேபோல, பல்வேறு மாவட்டங்களில் சேர்த்து, 30 லட்சம் ஏக்கருக்கு மேல் நெல் சாகுபடி மேற்கொள்ள வேளாண் துறையினர் இலக்கு நிர்ணயித்துள்ளனர்.
மாநிலம் முழுதும் வடகிழக்கு பருவமழை (NorthEast Monsoon) பரவலாக பெய்து வருகிறது. தஞ்சாவூர், நாகப்பட்டினம், கடலுார், திருவண்ணாமலை, தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட பல மாவட்டங்களில், கனமழை கொட்டி தீர்த்துள்ளது. இதனால், இந்த மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் உள்ளிட்ட பலவகை பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.
இவற்றை கணக்கெடுக்கும் பணிகளை, வேளாண் துறையினர் துவக்கி உள்ளனர். தீபாவளி பண்டிகை விடுமுறை என்பதால், கணக்கெடுப்பு பணிகளில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது. வயல்களில் தேங்கிய மழைநீரை வடிய செய்யும் முயற்சிகளில், விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, விடுமுறை முடிந்து நாளை மறுதினம் முதல், பயிர் பாதிப்பு கணக்கெடுப்பு தீவிரம் அடையும்.
மேலும் படிக்க
கொள்முதல் நிலையங்களில் ஏக்கருக்கு 30 நெல் மூட்டைகள் மட்டுமே வாங்கப்படுவதால் விவசாயிகள் தவிப்பு!