News

Saturday, 29 May 2021 07:05 AM , by: Daisy Rose Mary

உப்புத் தண்ணீரில் வாய் கொப்பளித்து கொரோனா பரிசோதனை செய்யும் புதிய முறையை நாக்பூர் விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர். இதன் மூலம் 3 மணி நேரத்தில் முடிவை தெரிந்து கொள்ளலாம்

கொரோனா பரிசோதனைக்கு புதிய முறை

கொரோனா தொற்று ஏற்பட்டது முதல், அதற்கான பரிசோதனை கட்டமைப்புகளை இந்தியா பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில் மிக எளிமையான , புதுமையான கொரோனா பரிசோதனை முறையை அறிவியல் தொழில் ஆராய்ச்சி கவுன்சிலின் (சிஎஸ்ஐஆர்) தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி மைய (NEERI) விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். உப்புத் தண்ணீரில் வாய் கொப்பளித்து ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்யும் முறைதான் இது. இது எளிதாகவும், விரைவாகவும், சவுகரியமாகவும், சிக்கனமாகவும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

3 மணி நேரத்தில் முடிவு 

இதில் 3 மணி நேரத்தில் முடிவை தெரிந்து கொள்ளலாம் என்பதால், கிராமங்கள் மற்றும் பழங்குடியின பகுதிளுக்கு இந்த பரிசோதனை பொருத்தமாக இருக்கும். இது குறித்து சுற்றுச்சூழல் வைராலஜி பிரிவு மூத்த விஞ்ஞானி, டாக்டர் கிருஷ்ணா கையர்னர் கூறியதாவது, சளி பரிசோதனை முறைக்கு நேரம் ஆகிறது. மேலும், மூக்கு மற்றும் தொண்டையில் இருந்து சளி மாதிரிகளை சேகரிக்க வேண்டியுள்ளதால், இது நோயாளிகளுக்கு சற்று அசவுகரியமாகவும் உள்ளது.

மேலும், இதை பரிசோதனை மையத்துக்கு கொண்டு செல்ல நேரம் ஆகிறது. வாய் கொப்பளித்து, ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்யும் முறை நோயாளிகளுக்கு எளிதாக உள்ளது மற்றும் முடிவுகளை 3 மணி நேரத்தில் அறிய முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க....

தமிழகத்தில் ஊரடங்கு மேலும் ஒருவாரம் நீட்டிப்பு - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு!!

கொரோனாவைக் குணப்படுத்தும் கத்திரிக்ககாய் சொட்டு மருந்து-ஆந்திராவில் களைகட்டும் விற்பனை!

தடுப்பூசி விலையை நிர்ணயம் செய்ய தயாரிப்பு நிறுவனங்களுக்கு அதிகாரம் இல்லை! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)