1. செய்திகள்

கொரோனாவைக் குணப்படுத்தும் கத்திரிக்ககாய் சொட்டு மருந்து-ஆந்திராவில் களைகட்டும் விற்பனை!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Eggplant drops to cure corona - Weed sale in Andhra Pradesh!
Credit:Dailythanthi

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்துவருவதால், அதனைப் பயன்படுத்தி வருமானம் பார்ப்பவர்களும் முளைக்கத் தொடங்கிவிட்டனர். மறுபுறம் அதனை நம்பி ஏமாறுபவர்களும் அதிகரித்து வருகின்றனர்.

வாங்க  அலைமோதும் மக்கள் (Wandering people to buy)

ஆந்திராவில், நாட்டு வைத்தியர் தயாரித்தக் கொரோனாவை குணப்படுத்தும் கத்தரிக்காய் கண்சொட்டு மருந்தை வாங்க மக்கள் கூட்டம் படையெடுப்பதால் கள்ளச்சந்தையில் விற்பனை அதிகரித்து உள்ளது.

ஆயுர்வேத மருத்துவம் (Ayurvedic medicine)

ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், கிருஷ்ணப்பட்டினம் முத்துக்கூறு கிராமத்தை சேர்ந்தவர் போனஜி ஆனந்தய்யா என்பவர் பல ஆண்டுகளாக பொதுமக்களுக்கு ஆயுர்வேத மருந்துகளை வழங்கி, வைத்தியம் பார்த்து வருகிறார்.

கத்திரிக்காய் சொட்டு மருந்து (Eggplant drops)

சமீபத்தில் இவர் கொரோனா நோயாளிகளுக்காகத் தேன், வால் மிளகு, கத்திரிக்காய் போன்ற பொருட்கள் கொண்டு மருந்து தயாரித்தார். இது நல்ல பலன் தந்ததால் அவரிடம் மருந்து வாங்க பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கிருஷ்ணப்பட்டினத்தில் குவியத் தொடங்கினர்.இது கண்ணில் போடக்கூடிய சொட்டு மருந்தாகும்.

ஆய்வு செய்ய உத்தரவு (Order to inspect)

இதுகுறித்து தகவலறிந்த ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, ஆனந்தய்யாவின் ஆயுர்வேத மருந்து உண்மையில் கொரோனா தொற்றை குணப்படுத்துகிறதா என்பதை ஆய்வு செய்யுமாறு ஐசிஎம்ஆர் குழுவுக்கு உத்தரவிட்டிருந்தார்.

விற்பனைக்குத் தடை (Prohibition on sale)

அதுவரை ஆனந்தய்யாவின் மருந்து விநியோகத்தை நிறுத்துமாறும் அவர் அறிவுறுத்தியதால், போலீசார் மற்றும் வருவாய் அதிகாரிகள் தலையிட்டு அவரது மருந்து விநியோகத்தை முற்றிலுமாக நிறுத்திவிட்டனர்.

மூலிகை மருந்து (Herbal medicine)

இந்நிலையில், ஆந்திர அரசு நியமனம் செய்த மருத்துவக் குழுகிருஷ்ணப்பட்டினம் சென்று, ஆனந்தய்யாவின் ஆயுர்வேத மருந்தை ஆய்வு செய்தது. இந்த மருந்தால் எவ்வித பக்க விளைவுகளும் இல்லை என்றும், இவை முற்றிலும் முறையான மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்படுவதாகவும் அக்குழு அறிவித்தது.

இந்த சூழலில், ஆனந்தய்யா நெல்லூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தனதுசிஷ்யர்களுடன் சேர்ந்து மிகப்பெரிய அளவில் கொரோனா மூலிகை மருந்தை தயாரித்து வருவதையும் ஒரு ஊடகம் ஒளிபரப்பியது.

பரிசோதனை (Experiment)

இதுபோன்ற சூழலில், ஆனந்தய்யா தயாரிக்கும் மருந்தை திருப்பதியில் உள்ள ஆயுர்வேத பல்கலைக்கழகத்தில்  எலிகள், முயல்களுக்கு கொடுத்து பரிசோதனை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எம்எல்ஏ தகவல் (MLA Information)

இந்த மருந்து குறித்து முழுமையாக அனைத்து பரிசோதனைகளையும் செய்த பிறகு, இதுதொடர்பான அறிக்கை மத்திய, மாநில அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும், அரசுகள் அனுமதி வழங்கினால், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் உதவியுடன் ஆயுர்வேத பல்கலைக்கழகத்தில் மருந்து தயாரித்து அனைத்து மாநிலங்களுக்கும் வழங்குவோம் என்றும் சந்திகிரி தொகுதி எம்எல்ஏ பாஸ்கர் ரெட்டி கூறினார்.

கள்ளச்சந்தையில் விற்பனை (Sale on the black market)

இதற்கிடையே, நெல்லூரில் தற்போது ஆனந்தய்யா தயாரித்த மருந்துகள் பாக்கெட் ஒன்றுக்கு ரூ.1,500 முதல் 2,000 ஆயிரம் வரை கள்ளச்சந்தையில் சிலர் விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது.

ஆனந்தையா ஒரு நாட்டு மருத்துவர் என ஆரம்பத்தில் விளம்பரம் செய்யப்பட்டாலும், பின்னர் அவர் ஆயுர்வேத சிகிச்சையுடன் இணைந்திருக்கிறார் என்று ஆயுஷ் அதிகாரிகள் கூறுகின்றனர்.

மேலும் படிக்க...

தடுப்பூசி விலையை நிர்ணயம் செய்ய தயாரிப்பு நிறுவனங்களுக்கு அதிகாரம் இல்லை! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சில மாதங்களுக்கு இந்தியாவில் தடுப்பூசி தட்டுப்பாடு நீடிக்கும்! சீரம் அதிகாரி அதிர்ச்சி தகவல்!

கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்க 8 பள்ளிகள் ஒப்படைப்பு- ஈஷா நடவடிக்கை!

English Summary: Eggplant drops to cure corona - Weed sale in Andhra Pradesh! Published on: 28 May 2021, 06:39 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.