CUET PG 2022: பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு CUET (PG) -2022 செப்டம்பர் 1 முதல் 7 வரையிலும், பின்னர் செப்டம்பர் 9 முதல் 11 வரையிலும் நடைபெறும். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் (UGC) தலைவர் எம் ஜெகதேஷ் குமார் (M Jagadesh Kumar) செவ்வாய்க்கிழமை அறிவித்தார். அட்மிட் கார்டு மற்றும் தேர்வு நடைபெறும் நகரங்கள் பற்றிய விவரங்கள் பின்னர் வெளியிடப்படும், என்றார்.
"2022-2023 ஆம் ஆண்டுக்கான கல்வி அமர்வுக்கு 66 மத்திய மற்றும் பங்கேற்கும் பல்கலைக்கழகங்களுக்கு முதுகலை நுழைவுத் தேர்வை நடத்தும் பொறுப்பு NTA-விடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது" என்று குமார் ட்வீட் செய்துள்ளார்.
CUET (PG) தேர்வு பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள்:
- CUET (PG) தேர்வு 3.57 லட்சம் விண்ணப்பதாரர்களுக்கு கணினி அடிப்படையிலான தேர்வு (CBT) முறையில் நடத்தப்படும்.
- CUET (PG) – 2022க்கான தேதிகள்: 01, 02, 03, 04, 05, 06, 07, 09, 10, மற்றும் 11 செப்டம்பர் 2022 ஆகும்.
- அட்வான்ஸ் சிட்டி இன்டிமேஷன் மற்றும் அட்மிட் கார்டு வெளியிடப்படும் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்.
- தேர்வுத் தாள் குறியீடு மற்றும் ஷிப்ட்/நேரத்துடன் விரிவான அட்டவணை NTA ஆல் அறிவிக்கப்படும்.
- பரீட்சை தொடர்பான சமீபத்திய அப்டேட்களுக்கு NTA இணையதளம்(கள்) nta.ac.in, cuet.nta.nic.in ஆகியவற்றைத் தொடர்ந்து பார்வையிடுமாறு விண்ணப்பதாரர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
- விண்ணப்பதாரர்கள் cuet-pg@nta.ac.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுத்துப்பூர்வமாகவும் தனது சந்தேகங்களை கேட்டறியலாம்.
மேலும் படிக்க:
IRCTC ரயில்களில் இதற்கு தடை.. இதனால் விலையில் மாற்றம் ஏற்படுமா?